அட்லீ படத்துக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. உடனடியாக ஆஜராகி கீர்த்தி சுரேஷ் போட்ட கமெண்ட்டை பாருங்க!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தெறி படத்தை இந்தியில் பேபி ஜான் எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அந்த படத்தை அட்லீ தயாரிக்க அவருடைய உதவி இயக்குநரான காலீஸ் இயக்கியிருக்கிறார். சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்து இந்த ஆண்டு ஓடிடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வருண் தவான் தமிழில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளார்.
டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேபி ஜான் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்த நிலையில், உடனடியாக கீர்த்தி சுரேஷ் ஆஜராகி நன்றியும் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு புரமோஷனுக்கு வந்த கீர்த்தி சுரேஷ் இன்னமும் புரமோஷன் மோடில் தான் இருக்காரா என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பேபி ஜான்: இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க சென்ற அட்லீ ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அங்கே தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பேபி ஜான் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் ஜாக்கி ஷெராஃப் மற்றும் கேமியோ ரோலில் சல்மான் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 25ம் தேதி படம் கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வெளியாகிறது.
விஜய் வாழ்த்து: தளபதி விஜய் நடிப்பில் சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா, பேபி நைனிகா, விஜய்யின் மகள் சாஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி அட்லீக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமைந்த பேபி ஜான் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்ட படக்குழுவினருக்கு ஆல் தி பெஸ்ட் என விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நன்றி: கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் திருமணத்தை முடித்த கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் புரமோஷனுக்காக மும்பையில் முகாமிட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் ட்வீட் போட்டு வாழ்த்து தெரிவித்த உடனே ரொம்ப நன்றி சார். உங்களின் இந்த வாழ்த்து எனக்கும் என் டீமுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

தளபதி 69 ரெடியாகுது: சென்னையில் தான் தொடர்ந்து தளபதி விஜய்யின் 69வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில் பூஜா ஹெக்டே ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களை ஹேப்பியாக்கிய நிலையில், கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசியல் பணிகளில் விஜய் ஆர்வம் செலுத்த உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











