இந்த முறை மிஸ் ஆகாது.. முதலமைச்சராகிறார் நடிகர் விஜய்.. ஆதரவு தெரிவித்த விசிக.. இனி விசில் சத்தம்தான்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியலில் புதிய சக்தியாக உருவாகியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளை வென்றிருக்கிறது. அவற்றில் விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றார். கூடிய விரைவில் அவர் ஒரு தொகுதியிலிருந்து ராஜினாமா செய்வார். எனவே மொத்தம் 107 எம்.எல்.ஏக்கள் தவெகவிலிருந்து சட்டப்பேரவைக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால் அடுத்த கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்பட்டது.
நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். மக்களவை தேர்தலை ஸ்கிப் செய்துவிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது அக்கட்சி. பத்து தொகுதிகள்கூட வெல்லாது என்ற ஆரூடம்தான் மே நான்காம் தேதி காலை பத்து மணி வரை இருந்தது. ஆனால் எல்லோரையும், ஆச்சரியப்படுத்தி அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய் மொத்தம் இரண்டு தொகுதிகளில் வென்றார்.

108தான் ஆனாலும் 107: தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 107தான். ஏனெனில் கூடிய விரைவில் திருச்சி கிழக்கிலோ அல்லது பெரம்பூரிலோ தனது எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்வார். மொத்தம் 107 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது தவெக. ஆனால் ஆளுநரோ வழக்கம்போல் தனது அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பிக்க; மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் தனது ஆதரவை கொடுத்தது.
திமுக கூட்டணி கட்சிகள்: காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னர் திமுகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டு இந்த முடிவை எடுத்தது. அதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏக்கள் ஆதரவை கொடுக்க தவெகவுக்கு பலம் 116ஆக அதிகரித்தது. இன்னும் இரண்டே எம்.எல்.ஏக்கள் வந்தால் போதும், சி.ஜோசப் விஜய் எனும் நான் என்பதை கேட்டுவிடலாம் என நகம் கடிக்க ஆரம்பித்தார்கள் விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும். அந்த இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவை விசிகவிடம் ரொம்பவே எதிர்பார்த்திருந்தது தவெக.

திருமாவின் முடிவு: தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து தன்னுடைய கட்சி நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தினார் திருமாவளவன். இன்று காலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால் விசிக அலுவலகம் முன்பு தவெக, விசிக தொண்டர்கள் குவிந்தார்கள். ஆனால் இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்து மேலும் காக்க வைத்தார் திருமாவளவன். அவரது முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலோடு காத்திருந்தது.
முதலமைச்சராகும் விஜய்: இந்நிலையில் விசிக தனது முடிவை அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறது. அதற்கான கடிதத்தை ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கினார் திருமாவளவன். விசிகவின் ஆதரவு கிடைத்திருப்பதால் தவெகவுக்கு 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. என்வே ஆளுநர் அர்லேகரை இன்று நான்காவது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார் விஜய். அநேகமாக திங்கட் கிழமை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
