விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள படம் ஓடிடியில் வெளியாகிறது!

சென்னை : கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் என பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாக நடிக்கவும் விஜய் சேதுபதிக்கு அதிகமான வாய்ப்புகள் வருவதால் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாப்ஸியுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் சத்தமே இல்லாமல் எடுக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹிந்தியில்

ஹிந்தியில்

தமிழ் சினிமாவில் எப்போதும் பரபரப்பான நடிகராயாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் படங்களுக்கு பல மொழிகளில் மவுசு அதிகமாகிக்கொண்டே போக விக்ரம் வேதா திரைப்படம் இப்பொழுது ஹிந்தியில் ஹிரித்திக் ரோஷன்,சைப் அலி கான் நடிப்பில் உருவாகிறது இந்த படத்தையும் புஷ்கர்,காயத்ரி இயக்குகின்றனர்.

டாப்ஸி உடன்

டாப்ஸி உடன்

தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார்,விக்ரம், மா மனிதன், மகிழ்,விடுதலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . இதற்கிடையில் சத்தமே இல்லாமல் டாப்ஸி உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தை பற்றிய அதிரடியான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

ஃபேஷன் ஸ்டுடியோஸ்

ஃபேஷன் ஸ்டுடியோஸ்

இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணைந்து நடித்துள்ளனர். நடிகை ராதிகா சரத்குமார்,தேவதர்ஷினி யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

சென்ற ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது. ஆனால் இதுவரை இந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் மாமனிதன் ஓடிடியில் வெளியாக இருக்க இப்பொழுது புதிதாக இந்தப் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X