"நான் திருடனா இருந்தாலும்..." - கேரக்டருக்கு விளக்கம் சொன்ன விஜய் சேதுபதி!
Recommended Video

சென்னை : அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'.
பிப்ரவரி 2-ம் தேதி இந்த படம் வெளியாகிறது. பட வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே இந்தப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டனர்.
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பட டீசர், விளம்பரங்களில் ஆர்கானிக் திருடன் எனும் வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்கானிக் திருடன்
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பட விளம்பரங்களில் ஆர்கானிக் திருடன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். அதென்ன ஆர்கானிக் திருடன் என்று கேட்டதற்கு, விஜய்சேதுபதி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நல்ல மனசு கொண்ட திருடன்
"திருட வரும்போது யாரையும் அடிக்கவோ தாக்கவோ கூடாது, திருடிய பொருட்களை தானே எடுத்துக்கொள்ளாமல் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நல்ல மனசு கொண்ட திருடன்தான் ஆர்கானிக் திருடன்" அவர் விளக்கினார்.

ஆர்கானிக் திருடனாக விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி சொன்ன விளக்கத்தின்படியே படத்தில் அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த மாதிரி பண்புகொண்ட திருடனுக்கு இப்படி ஒரு பேர் வைத்திருக்கிறார்களே என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications