Ace Box office: விஜய்சேதுபதியின் ‘ஏஸ்' படத்தின் இரண்டாம் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: மகாராஜா என்ற பிளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த, விஜய் சேதுபதி நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியானத் திரைப்படம் ஏஸ். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், பப்லு பிரிதிவிராஜ், திவ்யா பிள்ளை, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியாவிற்கு வேலைக்கு செல்லும் விஜய் சேதுபதிக்கு யோகி பாபுவின் அறிமுகத்தால் ஹோட்டலில் விஜய் சேதுபதிக்கு வேலை கிடைக்கிறது. அப்போது, ருக்மிணியுடன் காதல் மலர்கிறது. அந்த நேரத்தில் தான் ருக்மிணி தனது வளர்ப்பு தந்தையிடம் இருந்து வீட்டை மீட்க போராடுவதும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதும் விஜய் சேதுபதிக்கு தெரிகிறது. பணத்திற்காக வில்லன் அவினாஷுடன் விஜய் சேதுபதி சூதாட்டம் ஆடுகிறார். தொடர்ந்து விஜய் சேதுபதியே வெற்றி பெறுவதால், அவரை தோற்கடிக்க சூதாட்டத்தில் ஏமாற்றி வெற்றி பெற்று விஜய் சேதுபதியை கடனாளி ஆக்குகிறார். இந்த கடனை ஒரு வாரத்திற்குள் திருப்பி தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் விஜய் சேதுபதி, வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டு ரூ. 40 கோடி பணத்தை வங்கிக்கு செல்லும் வேனில் இருந்து திருடுகிறார். அதன்பின் என்ன நடந்தது? தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு மலேசியாவிற்கு வரும் விஜய் சேதுபதி யார்? என்பதுதான் ஏஸ் திரைப்படத்தின் கதை.

படத்தின் 2ம் நாள் வசூல்: இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த படியே நேற்றைய வசூல் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.1 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் சற்று அதிகரித்து ரூ.1.26 கோடியாக உள்ளது. படத்தின் மொத்த வசூல் 2.26 கோடியாக உள்ளது. ஆனால் கடந்த வாரம் வெளிவந்த சூரி நடித்த மாமன் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.1.75 கோடியை வசூலித்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாமன் திரைப்படம் 17.75 கோடியை வசூலித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால், ஏஸ் திரைப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலருக்கு தெரியவில்லை: இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி சென்னை கமலா திரையரங்கில் இயக்குநர் ஆறுமுக குமார் மற்றும் படக்குழுவினருடன் ஏஸ் திரைப்படத்தை பார்த்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனதே நிறைய பேருக்குத் தெரியவில்லை. அது எங்களுடைய தவறுதான். ஒரு சில நெருக்கடிகளால் படத்தை திடீரென வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். அது எல்லாத்தையும் இப்போது சொல்ல முடியாது. அது எல்லாத்தையும் இப்போது சொல்ல முடியாது. ஒரு படத்தை எடுத்தப்பிறகு அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் 'தக் லப்' படத்தை விளம்பரப்படுத்த 25 நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒருவாரத்திற்கு முன்னதாக தான் ப்ரோமோசன் பணிகளைத் தொடங்கினோம். எனினும் மக்களிடம் இருந்து ஏஸ் படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜய் சேதுபதி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











