ரஜினி படத்தில் விஜய் சேதுபதி.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended Video

சென்னை : ரஜினிகாந்த், '2.ஓ', 'காலா' ஆகிய படங்களை அடுத்து இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் விவரம் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
தற்போது, ரஜினியுடன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

கார்த்திக் சுப்புராஜ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விஜய் சேதுபதி
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியானது. இந்தத் தகவல் உறுதியாகாமல் இருந்துவந்த நிலையில், விஜய் சேதுபதி ரஜினியுடன் நடிக்கவிருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

அனிருத் இசை
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். ரஜினி, விஜய் சேதுபதி தவிர இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள் விவரம் இன்னும் வெளியாகவில்லை.

மீண்டும் விஜய் சேதுபதி
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா', 'இறைவி' படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். ரஜினியுடன் விஜய்சேதுபதி இணையும் முதல் படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நவாஸுதீன் சித்திக்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரிடம், ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications











