Vijay Sethupathi: அடுத்த வாரிசு ஹீரோ ரெடி... மகனுடன் கெத்து காட்டிய விஜய் சேதுபதி... ஹீரோயின் யாரு?

சென்னை: விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

அதுதவிர தமிழ், இந்தி மொழிகளில் இரண்டு வெப் சீரிஸ்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், தனது மகன் சூர்யாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

நானும் ரவுடி தான் படத்தில் சிறுவனாக நடித்திருந்த சூர்யா சேதுபதி, இப்போது ஹீரோ லுக்கில் மாஸ் காட்டுகிறார்.

விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் கிளிக்#கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருவதோடு வெப் சீரிஸ்களிலும் கமிட்டாகியுள்ளார். ஜவான் ஷூட்டிங் முடிந்ததும் தமிழில் மிஷ்கின் உள்ளிட்ட இன்னொரு முன்னணி இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ளார்.

 Vijay Sethupathi: Actor Vijay Sethupathis latest photo with his son Surya

இந்நிலையில், தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார் சூர்யா. சிறுவனாக வந்து மாஸ் காட்டிய சூர்யா, சிந்துபாத் படத்திலும் அப்பா விஜய் சேதுபதியுடன் நடித்தார். அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவில் அரும்பு மீசையுடன் இளம் ஹீரோ லுக்கில் கலக்கலாக காணப்படுகிறார். கிட்டத்தட்ட விஜய் சேதுபதியை அப்படியே நகலெடுத்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி முழுக்க ஒயிட் அண்ட் ஒயிட் லுக்கில் இருக்க, சூர்யா சேதுபதி அவரது அருகே அமர்ந்துள்ளார்.

இருவருமே ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதன்மூலம் தனது வீட்டிலும் ஒரு ஹீரோ ரெடியாகிவிட்டார் என விஜய் சேதுபதி லீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது. விஜய் சேதுபதியின் மகனை பார்த்த பல இயக்குநர்கள் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் கோலிவுட்டில் ஒரு இளம் ஹீரோ அறிமுகமாக வாய்ப்புள்ளது. மேலும், சூர்யா சேதுபதிக்கு ஜோடியாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் விவாதம் தொடங்கிவிட்டது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தில் சூர்யா சேதுபதி நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. முதல் பாகத்தில் சூர்யாவின் போர்ஷன் கிடையாது என்றும், இரண்டாம் பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போட்டோவை பார்க்கும் போது, விடுதலை படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக சூர்யா நடித்திருக்கலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X