Vijay Sethupathi: விஜய் சேதுபதியை விடாமல் துரத்தும் வில்லன் ரோல்... கார்த்தியின் சர்தார் 2 அப்டேட்
சென்னை: கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
பிஎஸ் மித்ரன் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், சர்தார் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

சர்தார் 2-வில் வில்லனாகும் விஜய் சேதுபதி:கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சர்தார் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்தார். கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் ஆக்ஷன் ஜானரில் உருவாகியிருந்தது. கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், முனிஷ்காந்த், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சர்தார், பாசிட்டிவான விமர்சனங்களுடன் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சர்தார் 2 படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது. ஜப்பான், கைதி 2 படங்களைத் தொடர்ந்து சர்தார் 2 படப்பிடிப்பில் கார்த்தி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்தார் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கார்த்தியின் ஜப்பான் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது ஜப்பான் படத்தில் இல்லையென்றும் சர்தார் 2ம் பாகம் எனவும் தற்போது தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

ஆனால் விஜய் சேதுபதி தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, அடுத்து ஜவானில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கில் ராம் சரணின் 16வது படத்திலும் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் தமிழில் மகாராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதுதான் அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தான் சார்தார் 2வில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம் விஜய் சேதுபதி. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியே வேண்டாம் என்றாலும் அவருக்கு தொடர்ந்து வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











