Vijay Sethupathi: என்ன பெரிய மாமன்னன், மாவீரன்... மகாராஜாவாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வரும் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட பிரபலம் நிதிலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் மகராஜா என படக்குழு அறிவித்துள்ளது.

மகாராஜாவாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி:கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை மிரட்டி வரும் விஜய் சேதுபதி, தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தியில் அவர் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. அதில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்த விஜய் சேதுபதி, தற்போது தமிழில் ஹீரோவாக கம்பேக் கொடுக்கவுள்ளார்.
அதன்படி விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும், படத்தின் டைட்டில் 'மகாராஜா' எனவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன், மாவீரன் வரிசையில் இப்போது மகாராஜாவாக விஜய் சேதுபதி களமிறங்கவுள்ளார். அதேபோல், இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. செஸ் விளையாட்டில் வரும் கிங் மேலே ஒரு கழுகு பறந்து வந்து உட்காருவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, அனுராக் ஆகியோரின் உருவமும் தெரிகிறது.
போஸ்டரிலேயே செம்ம லீட் கொடுத்து மிரட்டியுள்ளார் இயக்குநர் நிதிலன். அவரது முதல் படமான குரங்கு பொம்மை ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல், மகாராஜாவும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான கமர்சியல் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக தமிழில் வில்லனாக மட்டுமே அதிகம் கவனம் ஈர்த்துள்ளார் விஜய் சேதுபதி. இதனால், மகாராஜா படத்தில் மரண மாஸ் காட்டும் ஹீரோவாக அதகளம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்தாண்டு இறுதிக்குள் மகாராஜா திரைப்படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











