Vijay Sethupathi: புது ஹேர்ஸ்டைல், புது லுக்... கலக்குறாரே விஜய் சேதுபதி! திடீர்ன்னு என்னவாம்..?

சென்னை: கோலிவுட்டின் வெரைட்டி நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய் சேதுபதி.

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் மாஸ் காட்டி வருகிறார்.

ஜவான் படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது

 Vijay Sethupathi: Actor Vijay Sethupathis latest photo trending on Social Media
.

புதிய லுக்கில் மிரட்டும் விஜய் சேதுபதி:கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியிலும் பிஸியாகிவிட்டர். அட்லீ இயக்கியுள்ள ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு விஜய் சேதுபதி தான் வில்லனாக நடித்துள்ளார். ஹை பட்ஜெட் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜவான், விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் மிகப் பெரிய ஓபனிங் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகியிருந்தது. கூலிங் க்ளாஸ் அணிந்தபடி மிரட்டலாக இருந்த விஜய் சேதுபதிக்கு 'The Dealer of Death' என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார் அட்லீ. இதனால் ஜவானில் தரமான சம்பவங்கள் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், விஜய் சேதுபதியின் லுக்கும் ரசிகர்களிடம் அதிக ஹைப் கொடுத்துள்ளது.

 Vijay Sethupathi: Actor Vijay Sethupathis latest photo trending on Social Media

இந்நிலையில், ஜவான் மோடில் இருந்து வெளியே வந்த விஜய் சேதுபதி, தற்போது புதிய லுக்கிற்கு மாறிவிட்டார். வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கொஞ்சம் இளமையாக தோற்றமளிக்கும் விஜய் சேதுபதி, பார்க்கவே செம்ம ஸ்மார்ட்டாக இருப்பதாக கமெண்ட்ஸ்கள் தெறிக்கின்றன. இது புதிய படத்திற்கான லுக்காக இருக்குமோ என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' குறித்து சமீபத்தில் தான் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இதனால், விஜய் சேதுபதியின் புதிய லுக் மகராஜா படத்திற்காக இருக்கலாம் எனத் தெரிகிறது. இன்னும் சிலரோ இது விடுதலை 2ம் பாகத்துக்கான பெருமாள் வாத்தியார் லுக் எனக் கூறிவருகின்றனர். ஆனாலும் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X