ஜாக்கிரதையா லவ் பண்ணுங்க .. விஜய் சேதுபதி அட்வைஸ் !
சென்னை : ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். இவர் என்னதான் மிக பெரிய உயரத்தை அடைந்தாலும் தன்னால் முடிந்த அளவில் பல படங்களின் விளம்பரத்திற்கு உதவி செய்திருக்கிறார். இவர் முதல் பார்வை போஸ்டர் வெளியிடுவதில் இருந்து இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது என படங்களின் விளம்பரத்திற்கு உதவி வருகிறார்.

தற்போது நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து பேசியுள்ளார். இந்த இசைவெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடந்ததால், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட விஜய் சேதுபதி, லவ் யூ என்று முத்தங்களையும் கொடுத்திருந்தார் . விஜய் சேதுபதி இதுவரை சினிமாவில் எந்த நடிகரும் இல்லாத அளவு ரசிகர்களை நேசிப்பவர், எந்த ரசிகர் கட்டி அணைத்து முத்தம் கேட்டாலும் முத்தம் கொடுத்து போட்டோ எடுத்து கொள்வார்.
இவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது போஸ் வெங்கட் மிகவும் நல்ல மனிதர், சிலரின் முகங்களை பார்த்தாலே தெரிந்து விடும் அவர்கள் எப்படிபட்ட மனதை கொண்டவர்கள் என்று அப்படி நான் அவர் முகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறினார். மேலும் போஸை மெட்டி ஒலி நாடகத்தில் இருந்து நான் பார்த்து ரசித்து வருகிறேன் என கூறினார் .

மேலும் நடிகர் போஸ் நம்பிக்கை மிகுந்த மனிதர்களில் ஒருவர். அவர் எவ்வாறு கவண் படத்தில் அந்த அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு தேர்வானார் என கூறினார் விஜய் சேதுபதி. கவண்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அரசியல்வாதி தீரன் மணியரசு என்று கூறலாம். அந்த கதாபாத்திரத்தை மிக சரியாக நடித்திருப்பார் போஸ் வெங்கட்.

இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் போஸ் தேர்வாகவே இல்லை, வழுக்கை தலையுடைய ஒருவரை தேடி வந்தார்களாம். இதனால் போஸ் சட்டென்று தன் தலையின் முன் பகுதி முழுக்க எடுத்து வழுக்கை தலையாக்கி கே.வி.ஆனந்திடம் காட்டி படத்தில் நடிக்க வந்தாராம் . நடிகர் விஜய் சேதுபதி பேசி முடிக்கும் போது காதலர் தின வாழ்த்துக்களை கூறிவிட்டு சட்டென்று ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்தார்.
கன்னி மாடம் படத்தை போஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்திற்கு ஹரி சாய் இசையமைத்து இருக்கிறார். படத்தில் ஶ்ரீராம் கார்த்திக், சயா தேவி மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











