For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழில் ஒரு லஸ்ட் ஸ்டோரியா? ஆபாச வசனங்கள்.. படுக்கையறை காட்சிகள் நிறைந்த குட்டி ஸ்டோரி டிரைலர்!

  |

  சென்னை: விஜய்சேதுபதி, அமலா பால், கெளதம் மேனன், அதிதி பாலன், சாக்‌ஷி அகர்வால் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

  வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர்கள் கெளதம் மேனன், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு மற்றும் விஜய் இணைந்து இயக்கிய இந்த ஆந்தாலஜி திரைப்படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.

  அடேங்கப்பா.. நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அட்டகாச அதிர்ஷ்டம்.. இவ்ளோ கோடியாமே? அடேங்கப்பா.. நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அட்டகாச அதிர்ஷ்டம்.. இவ்ளோ கோடியாமே?

  ஆபாச வசனங்கள், எல்லை மீறிய காட்சிகள் என பிட்ட கதலு டிரைலரையே ஓவர்டேக் செய்துள்ளது குட்டி ஸ்டோரி டிரைலர்.

  அறைவாங்கும் விஜய்சேதுபதி

  அறைவாங்கும் விஜய்சேதுபதி

  அருவி படத்தில் பார்த்த அதிதி பாலனை அப்படியே விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் இயக்குநர் நலன் குமாரசாமி களமிறக்கி உள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளார். ஜிம் வொர்க்கவுட் எல்லாம் பண்ணி கெத்தாக விஜய்சேதுபதியை காட்டி விட்டு, அதிதி பாலனிடம் சப்புன்னு அறை வாங்கும் காட்சியையும் வைத்துள்ளார். இனி மாச மாசம் மக்கள் செல்வனின் ஒரு படம் ரிலீசாகும் போல!

  எப்படி என்ன கிஸ் பண்ணலாம்

  எப்படி என்ன கிஸ் பண்ணலாம்

  நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் தெலுங்கில் வரும் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகவுள்ள பிட்ட கதலு படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், குட்டி ஸ்டோரியிலும் நடிகை அமலா பால் வேற லெவலில் உசுப்பேற்றும் வசனங்களை பேசி நடித்துள்ளார். உனக்கு தான் ஒரு கேர்ள் பிரெண்ட் இருக்குன்னு சொன்னியே, அப்புறம் எப்படி என்ன கிஸ் பண்ணலாம் என விவகாரமாக கேட்கும் காட்சிகள் டிரைலரை வைரலாக்கி வருகின்றன.

  ஆபாச வசனம்

  ஆபாச வசனம்

  அமலா பால் நடித்துள்ள கதையை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ளார். மேலும், பாவக் கதைகளில் இடம்பெற்றதை போலவே இந்த படத்திலும் அதிகமான ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒடிடிக்கு அது ஓகே, தியேட்டரில் கெளதம் மேனன் பேசும் அந்த வார்த்தைக்கு மியூட் போடுகிறார்களா? என்று பார்ப்போம். கெளதம் மேனனின் யங் வெர்ஷனாக வினோத் கிஷன் சரியான தேர்வு.

  வைஃப புடிக்குமா?

  வைஃப புடிக்குமா?

  குளியலறையில் பாவாடையை கட்டிக் கொண்டு செம செக்ஸியாக அமர்ந்திருக்கும் அதிதி பாலன், போனில் உனக்கு உன் வைஃப புடிக்குமா? என்ன புடிக்குமா? என கேட்கும் வசனங்கள் டிரைலரை வேற லெவலில் வைரலாக்கி வருகின்றன. தமிழில் உருவாகி உள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் போலவே இந்த ஆந்தாலஜி அமைந்துள்ளதாக தெரிகிறது.

  படுக்கையறையில் மேகா

  படுக்கையறையில் மேகா

  நடிகை மேகா ஆகாஷ் அமுல் பேபி அமிதாஷ் உடன் ஒன்றாக சேர்ந்து படுக்கையறையில் சேர்ந்திருக்கும் காட்சிகளும், டாய்லெட்டில் பிரெக்னன்ஸி டெஸ்ட் எடுத்துப் பார்த்து அழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12ம் தேதி திரைக்கு இந்த குட்டி ஸ்டோரி வெளியாகிறது.

  அனிமேஷன் எதுக்கு

  அனிமேஷன் எதுக்கு

  இந்த டிரைலரையே கெடுப்பது போல சில அனிமேஷன் காட்சிகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. மேலும், டிரைலர் கட்ஸ் சூப்பராக எடிட் செய்யப்பட்டுள்ளது. அனிமேஷன் இல்லாமல் இருந்தாலே குட்டி ஸ்டோரி இளைஞர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெயிட் பண்ணி பார்ப்போம்.

  முன்னாள் கணவர்

  இயக்குநர் ஏ.எல் விஜய்யை விவாகரத்து செய்த நிலையில், இந்த குட்டி ஸ்டோரியில் ஒரு கதையை அவர் இயக்கியும் ஒரு கதையில் அமலா பால் நடித்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் மேனன் இயக்கத்தில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பதும் அந்த கடைசி ஷாட் பஸ் காட்சியும் வேற லெவல்!

  English summary
  Gautham Menon, AL Vijay, Venkat Prabhu and Nalan Kumarasamy four directors joined for 4 stories anthology movie Kutty story trailer out now.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X