நிர்வாண ஓவியம்.. ஆண்ட்ரியா மிரட்டுறாங்க.. விஜய்சேதுபதி இருக்காரு.. மிஷ்கினின் பிசாசு 2 டீசர் ரிலீஸ்!

சென்னை: துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குநர் மிஷ்கினை அதிரடியாக நடிகர் விஷால் வெளியேற்றியது பெரும் பஞ்சாயத்தை கிளப்பியது.

இந்நிலையில், மீண்டும் இயக்குநராக பிசாசு 2 படம் மூலம் மிரட்டுவார் மிஷ்கின் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிசாசு 2 படத்தின் பயமுறுத்தும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின்

கடந்த 2006ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிஷ்கின். கொரிய படங்களின் தாக்கம் இவர் படங்களில் அதிகமாகவே இருக்கும். டார்க் தீம் படங்களை இயக்குவதில் பெயர் போன மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிசாசு 2

பிசாசு 2

இந்நிலையில், 2022ம் ஆண்டு பிசாசு 2 படத்தை வெளியிட தயாராகி உள்ளார் இயக்குநர் மிஷ்கின். அதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இன்றி, இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி, சந்தோஷ் பிரதாப், பூர்ணா என ஒட்டுமொத்தமாக புதிய ஸ்டார் காஸ்ட் உடன் இந்த படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார்.

நிர்வாணமாக ஆண்ட்ரியா

நிர்வாணமாக ஆண்ட்ரியா

சுந்தர் சியின் அரண்மன படங்களில் பேயாக நடித்து வந்த நடிகை ஆண்ட்ரியா மிஷ்கின் படத்தில் பேயாக நடித்துள்ளார். வடசென்னை படத்தில் அரை நிர்வாணமாக 'என்னடி மாயாவி' பாடல் காட்சியில் நடித்த ஆண்ட்ரியா இந்த படத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அப்படி நடிக்க தன்னை இயக்குநர் கட்டாயப்படுத்தினார் என்றும் கதைக்கு தேவைப்பட்டதால் நானும் சம்மதித்தேன் எனக் கூறியுள்ளார் ஆண்ட்ரியா.

டீசர் ரிலீஸ்

டீசர் ரிலீஸ்

இந்நிலையில், தற்போது பிசாசு 2 படத்தின் டீசரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளார் இயக்குநர் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைப்பில் பின்னணி மிரட்டுகிறது. டீசர் கட்ஸ் திகிலூட்டுகிறது. பிசாசு 2 திரைப்படம் ஆண்ட்ரியாவுக்கு விருது வாங்கிக் கொடுக்கும் என ஏற்கனவே மிஷ்கின் பேட்டிகளில் கூறியிருந்த நிலையில், டீசரிலும் அவரது லுக் மிரட்டுகிறது.

நிர்வாண ஓவியம்

ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக வெளியான தகவல்களால் டீசரில் ஏதாவது காட்சி இருக்குமா என எதிர்பார்த்து பார்த்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு நிர்வாண ஓவியம் மட்டும் தான் மிஞ்சியது. படத்தில் பிரத்யேகமாக அந்த காட்சிகளை பார்த்துக் கொள்ளுங்கள் என இப்போதே அதை ரிவீல் செய்யாமல் இயக்குநர் இருந்தது சிறப்பான விஷயம் தான்.

விஜய்சேதுபதி இருக்காரு

விஜய்சேதுபதி இருக்காரு

ஆண்ட்ரியா, பூர்ணா, சார்பட்டா பரம்பரை சந்தோஷ் பிரதாப் என சில தெரிந்த முகங்களுக்கு நடுவே திடீரென டீசரில் விஜய்சேதுபதியை பார்த்த ரசிகர்களுக்கு செம ஹேப்பி தான். கடந்த ஆண்டு மிஸ் பண்ணதை ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு அடைந்து விட வேண்டும் என்பதில் தெளிவாக திட்டம் போட்டு ஒவ்வொரு படத்திலும் தனக்கான ஸ்பேஸை உருவாக்கி வருகிறார் விஜய்சேதுபதி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விரைவில் பிசாசு 2 திரையரங்குகளில் மிரட்ட வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X