விஜய்சேதுபதி பைக் பின்னாடி உட்கார்ந்திருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. எங்க போறாங்க தெரியுமா?
சென்னை: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ள அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் பைக் பின்னாடி புகழ் அமர்ந்திருக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி அதனை உறுதி செய்துள்ளது.
சேதுபதி படத்திற்கு பிறகு இந்த படத்தில் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஸ்பெஷல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பொன்ராம். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரஜினி முருகன், சீமராஜா என வரிசையாக படங்களை இயக்கி வந்த பொன்ராம் தற்போது முதல் முறையாக விஜய்சேதுபதி உடன் கூட்டணி வைத்துள்ளார்.

46வது படம்
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு அரை டஜன் படங்களில் நடித்து அசத்தி வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 46வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. சேதுபதி படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கிய விஜய்சேதுபதி இந்த படத்திலும் காக்கிச் சட்டை போட்டு காமெடியில் கலக்க உள்ளார்.

குக் வித் கோமாளி புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய புகழுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வரும் புகழ், விஜய்சேதுபதியுடன் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

மாறிய காம்பினேஷன்
வழக்கமாக பொன்ராம் படங்களில் சிவகார்த்திகேயன் - சூரி காம்பினேஷன் காமெடியில் பிச்சி உதறும். சீமராஜா படத்திற்கு பிறகு எம்ஜிஆர் மகன் மற்றும் லேட்டஸ்ட்டாக உருவாகி வரும் விஜய்சேதுபதி 46 படத்தில் என அந்த காம்பினேஷன் தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் புகழும் என்ன ரகளை செய்ய காத்திருக்கின்றனர் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

கிரிக்கெட் பேட் உடன்
விஜய்சேதுபதியின் படப்பிடிப்பு காட்சிகள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குக் வித் கோமாளி பிரபலம் புகழ், விஜய்சேதுபதி உடன் பைக்கில் அமர்ந்திருக்க, முன்னாடி கிரிக்கெட் பேட் உள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், நண்பனுடன் ஜாலியாக கிரிக்கெட் ஆடப் போகிறாரா? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.


Click it and Unblock the Notifications











