விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? டைட்டில் டீசர் வெளியானது!

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் தலைவன் தலைவி. இதில், நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கி பெயர் எடுத்த இயக்குநர் பாண்டிராஜ், மூன்று வருடத்திற்கு பிறகு இயக்கி இருக்கும் திரைப்படம் தான் தலைவன் தலைவி. இந்த படத்திற்கு முன் பாண்டியராஜ், சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, செம்பியன் வினோத் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

Vijay Sethupathi Nithya Menon Thalaivan Thalaivi

தலைவன் தலைவி: இந்நிலையில், இப்படத்திற்கு தலைவன் தலைவி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அப்பா, அம்மாவை எல்லாம் விட்டு விட்டு, நான் தான் வேண்டும் என்று வந்து இருக்கா, அவளை மகாராணி போல தங்குவேன் என்று விஜய்சேதுபதி சொல்ல, கொத்து பரோட்டாவை கொத்திக்கொண்டு இருக்கும் நித்யா மேனன், இது தான் மகாராணி போல பாத்துக்கும் லட்சனமா என்று கேட்க, பிடிக்கவில்லை என்றால், உங்க அப்பாவின் அரண்மனைக்கு போடி என்று விஜய் சேதுபதி சொல்ல, இருவருக்குள்ளும் செல்ல சண்டை நடக்கிறது. டீசரின் முடிவில், அவர்கள் இருவரும் நார்மல் பீப்பில் இல்ல, ப்ளீஸ் புரிஞ்சிங்கோங்க என நயன்தாராவை வம்புக்கு இழுத்து பேசி இருக்கிறார் யோகி பாபு, இந்த டைட்டில் டீசர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்து இருப்பதால், அதற்காக ஒரு பரோட்டா கடையில் சில நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கைவசம் உள்ள படம்: சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்ஸா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து பல வெற்றிப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தில் வில்லனாக களமிறங்கினார். இதைத்தொடர்ந்து, விக்ரம், ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரமே வருவதால், இனிமேல் வில்லனாக நடிக்கப்போவதில்லை என கூறிய விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு மகாராஜா, விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இதில், மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது.

மகாராஜா, விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும், வழக்கமாக பல நடிகர்களுக்கு 50 திரைப்படம் என்றால், அது சொதப்பிக்கொண்டு போய் விடும். ஆனால், மகாராஜா படம், விஜய்சேதுபதியின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துவிட்டது. தற்போது, விஜய்சேதுபதி ace, ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X