எங்கள நசுக்க நெனச்சா சும்மா இருப்பேனா?.. விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ வெறித்தனமான டீசர்!
சென்னை: மகாராஜா படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் மாஸ் கமர்ஷியல் இயக்குனர் பூரி ஜெகந்நாத் உடன் கைகோர்த்துள்ளார். இவர்களின் மெகா கூட்டணியில் உருவாகியுள்ள 'ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு" திரைப்படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
5 மொழிகளில் ரிலீஸ்: பூரி ஜெகந்நாத் என்றாலே ஹீரோக்களை அல்டிமேட் மாஸ் ஆகக் காட்டுவதில் வல்லவர். அந்த வகையில், விஜய் சேதுபதியை இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட ரக்கட் லோக்கல் லுக்கில் காட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் பான்-இந்திய படமாக அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.

தெறிக்கும் டயலாக்: டீசரின் ஆரம்பமே விஜய் சேதுபதியின் குரலில் ஒலிக்கும் மாஸ் வசனத்தோடு தொடங்குகிறது. ஒரு மழை அடித்தாலே காக்கா போல ஒதுங்கிக்கொள்ளும் வாழ்க்கைதான் நாங்கள் வாழ்கிறோம். அந்த வாழ்க்கையையே யாராவது நசுக்க நினைத்தால் நான் எப்படி சும்மா இருப்பேன்? என்ற எமோஷனல் டயலாக்கைத் தொடர்ந்து, அதிர வைக்கும் வகையிலான அதிரடி ஆக்ஷன் பிளாக்குகள் டீசரில் உள்ளன. சேரியைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மையமாக வைத்து, பூரி ஜெகந்நாத் தனது பாணியில் பக்கா கமர்ஷியல் மசாலாவாக படத்தை உருவாக்கி உள்ளார் என்பது டீசரைப் பார்க்கும்போதே அப்பட்டமாகத் தெரிகிறது.

மிரட்டும் கெட்டப்பில் தபு: இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சம்யுக்தா, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் திரையுலகின் எவர்கிரீன் நடிகை தபு இந்தப் படத்தின் மூலம் அதிரடி ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். டீசரில் அவர் கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருப்பது படத்தின் மீதான சுவாரசியத்தை பல மடங்காக்கி உள்ளது.
அதிரடியான டிரைலர்: ஒரு நிமிடத்திற்கும் மேலாக ஓடும் இந்த டீசர் முழுவதும் ஆக்ஷன், எமோஷன் மற்றும் மாஸ் காட்சிகளாக உள்ளன. பூரி ஜெகந்நாத்தின் அசாத்திய மேக்கிங், காதுகளைக் கிழிக்க வைக்கும் தரமான பின்னணி இசை மற்றும் விஜய் சேதுபதியின் வெறித்தனமான ஆட்டம் என அனைத்தும் சேர்ந்து 'ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications