தக் லைஃப் மிஸ் ஆகிடுச்சு.. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போவது யாரு?.. ஹீரோயின் இவரா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பெரிதாக பூர்த்தி செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. சூர்யாவுக்கு கங்குவா ஃப்ளாப் ஆனது போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் ஃப்ளாப் ஆனது ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியது.

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் வெற்றிப் படங்களை கொடுப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay Sethupathi and Rukmini Vasanth are in talks with Maniratnam s Next
Photo Credit:

முன்னதாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பெயர் அடிபட்டு வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் என்று கூறுகின்றனர்.

பைசன் வெற்றி: தமிழ்நாட்டிலேயே கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூலை துருவ் விக்ரம் நடித்த பைசன் படம் பெற்று அப்பா சியான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தை முந்தியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பைசன் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் இயக்குநரையும் ரொம்பவே கவனமாக தேர்ந்தெடுக்க துருவ் விக்ரம் முடிவு செய்திருக்கிறார் என்கின்றனர். அதனால், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிப்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

Vijay Sethupathi and Rukmini Vasanth are in talks with Maniratnam s Next
Photo Credit:

மணிரத்னம் இயக்கத்தில் மக்கள் செல்வன்: செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா உள்ளிட்ட பலருடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டி இருப்பார். பொன்னியின் செல்வன் படத்திலே அவர் நடிக்க வேண்டியது. ஆனால், கால்ஷீட் காரணமாக அந்த வாய்ப்பு தள்ளிப்போன நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

காந்தாரா ஹீரோயின்: ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ருக்மணி வசந்த் தான் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. காந்தாரா படத்தின் வெற்றிக்குப் பிறகு ருக்மணி வசந்துக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X