சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதி.. அட்டகாசமாக வெளியான டிரெய்லர்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: அர்ஜுன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, ஹரிஷா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் படம் உருவாகி உள்ள நிலையில், அதன் டிரெய்லர் இன்று வெளியானது. ஏற்கனவே டீசர் வெளியான போதே இந்த படத்திற்காக 3 ஆண்டுகள் கதைக்காக உழைத்தோம் என படக்குழுவினர் சொல்ல, அவதார் படமா எடுக்குறீங்க 3 வருஷம் வேலை பார்க்க என மிர்ச்சி சிவாவே பங்கமாக கலாய்த்தது டிரெண்டானது.

மேலும், ரஜினிகாந்துக்கும் தனக்கும் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனை வந்ததே கிடையாது என்றும் அவர் இந்தியளவில் மட்டும் தான் சூப்பர் ஸ்டார். நான் அனைத்து கேலக்ஸி, பிளாக் ஹோல் என எல்லாத்திலும் சூப்பர் ஸ்டார் என காமெடியாக பேசி அந்த விஷயத்தை கடந்து சென்றார்.

soodhu kavvum 2 vijay sethupathi mirchi siva 2

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன் 2ம் பாகத்தின் டிரெய்லரில் விஜய் சேதுபதி காட்டி அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் இயக்குநர் அர்ஜுன் செம கனெக்டிவிட்டியை கொடுத்திருக்கிறார்.

சூது கவ்வும்: தமிழ் சினிமாவில் நெல்சனுக்கு முன்னதாக டார்க் காமெடி படமாக வெளியாகி வெறித்தனம் காட்டிய படம் என்றால் அது சூது கவ்வும் தான். கானா பாலா குரலில் அந்த படத்தில் இடம்பெற்ற "காசு பணம் துட்டு மணி மணி" பாடலை பாடாத ஆளே கிடையாது என்கிற அளவுக்கு வேறலெவலில் ரசிகர்களை கவர்ந்தது. அதன் 2ம் பாகம் 11 ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய ஃபிளேவரில் புதிய டீமுடன் உருவாகி இருக்கிறது.

சூது கவ்வும் 2 டிரெய்லர் ரிலீஸ்: மிர்ச்சி சிவா, ஹரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். மேலும், பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த சூது கவ்வும் 2 படத்தின் கலக்கலான காமெடி டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் சேதுபதி வராரு: முதல் பாகம் முழுக்க விஜய் சேதுபதி இந்த படத்தில் மிரட்டியிருப்பார். 2ம் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கவில்லை. விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றதுமே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்றே குறைந்து இருந்தது. இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சஞ்சிதா ஷெட்டி வரும் காட்சிகளையும் வைத்து கட் செய்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2 படங்களுக்கும் இடையேயான கனெக்‌ஷனும் வலுவாக இருக்கும் என தெரிகிறது.

எப்போ ரிலீஸ்: இந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் டிசம்பர் 13ம் தேதி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 படம் வெளியாகிறது. அதற்கு அடுத்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2 வெளியாகிறது. டிசம்பர் மாதம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் நல்லாவே கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X