Don't Miss!
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- News
ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பாலிவுட்டை பதறவைத்த விஜய் சேதுபதி... Farzi வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்... OTT ஆடியன்ஸ் ரெடியா?
மும்பை: கோலிவுட்டில் வெரைட்டியான நடிகராக கலக்கி வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்தியில் டிகே & ராஜ் இணைந்து ஃபார்ஸி என்ற வெப் சீரிஸ்ஸை இயக்கியுள்ளனர்.
அமேசான் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ்ஸில் விஜய் சேதுபதி லீடிங் கேரக்டரில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் ஷாகித் கபூரும் நடித்துள்ள ஃபார்ஸி வெப் சீரிஸ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
Varisu box office day 3: 2023ம் ஆண்டில் முதல் 100 கோடி கிளப்பில் இணையும் விஜய்...?

பாலிவுட்டில் விஜய் சேதுபதி
தமிழில் பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாக வந்து சென்ற விஜய் சேதுபதி, தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களின் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்த விஜய் சேதுபதியின் கால்ஷீட் இன்று செம்ம பிஸியாக உள்ளது. ஹீரோ, காமெடி, வில்லன் என வெரைட்டியான பாத்திரங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி கோலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ரசிகர்களை அசரடித்த அவர் தற்போது பாலிவுட் ரசிகர்களையும் பதற வைத்துள்ளார்.

மாஸ் கூட்டணியில் ஃபார்ஸி வெப் சீரிஸ்
இந்தியில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள ராஜ் & டிகே, கடைசியாக தி பேமிலி மேன் வெப் சீரிஸ்ஸை இயக்கியிருந்தனர். மனோஜ் பாஜ்பாய், சமந்தா நடிப்பில் அமேசான் ஓடிடியில் வெளியான தி பேமிலி மேன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜ் & டிகே இயக்கியுள்ள ஃபார்ஸி வெப் சீரிஸில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருடன் ஷாகித் கபூர், ராஷி கண்ணா ஆகியோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளியானது ஃபார்ஸி ட்ரெய்லர்
இந்நிலையில், ஃபார்ஸி வெப் சீரிஸ்ஸின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிகே & ராஜ் இந்த வெப் சீரிஸ்ஸிலும் வழக்கமாக தங்களது இன்வெஸ்டிகேஷன் ஆக்ஷன் ட்ரீட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ஷாகித் கபூர் கோடி கோடியாக கள்ள நோட்டுகளை அச்சடிக்கிறார். அவரையும் அவரது கும்பலையும் தேடி வரும் ஸ்பெஷல் போலீஸ் ஆபிஸராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஷாகித் கபூரின் வில்லத்தனமும் விஜய் சேதுபதியின் மேனரிசமும் ஃபார்ஸி வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

அமேசான் ஓடிடியில் ரிலீஸ்
முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஃபார்ஸி வெப் சீரிஸ், விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் மாஸ் என்ட்ரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எப்போதும் போல அதே அசால்ட்டான பாடி லேங்குவேஜில் செம்ம மாஸ்ஸாக மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ள ஃபார்ஸி வெப் சீரிஸ், பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. விஜய் சேதுபதி - ஷாகித் கபூர் காம்போவில் தரமான ஒரு வெப் சீரிஸ்ஸை பார்ப்பதற்காக ஓடிடி ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.
-
Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்ற அசீம்.. மக்கள் நாயகன்!
-
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!
-
இந்த பக்கம் மிஷ்கின்.. அந்த பக்கம் கெளதம் மேனன்.. பறக்கும் தளபதி 67 மீம்கள்.. அந்த 7 சாமுராய்!