பாலிவுட் ஹீரோவுடன்.. வெப் சீரிஸில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.. மாஸ்டர் ஹீரோயினும் இருக்காராமே!

By

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அமேசான் பிரைம் தயாரிக்கும் வெப் சீரிஸ் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Madhumitha shooting spotல் மயங்கி விழுந்துள்ளார் | Jangari Madhumitha

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

கால்ஷீட் பிரச்னை காரணமாக, தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இருந்து சமீபத்தில் விலகி இருந்தார்.

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா

பின்னர் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா படத்தில் இருந்தும் விலகினார். இதைப் படக்குழு உறுதிப்படுத்தியது. இப்போது மாமனிதன், ஜனநாதனின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், தீபக் சுந்தர்ராஜனின் அனபெல் சுப்ரமணியம் படங்களில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் ஹீரோ

பாலிவுட் ஹீரோ

துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் ஒரு படம் என நடித்து வரும் அவர், அடுத்து வெப் சிரீஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அமேசான் பிரைம் தயாரிக்கிறது. இந்த தொடரில் அவர் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார்.

ராஜ் மற்றும் டீகே

ராஜ் மற்றும் டீகே

மற்றொரு முக்கிய கேரக்டரில் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. பான் இந்தியா தொடராக உருவாக்குவதற்கு தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தேவை என்பதால் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

புதிதாக இருக்கும்

புதிதாக இருக்கும்

இந்த தொடர் மூலம் அவர் வெப் சிரீஸில் அறிமுகமாகிறார். இதற்காக அவருக்கு நல்ல சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஷாகித், விஜய் சேதுபதி இருவருமே இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிப்பதாகவும் இந்த கேரக்டர்கள் புதிதாக இருக்கும் என்றும் இந்த வெப்சீரிஸ் குழு கூறியுள்ளது.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

த பேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இந்த வெப்சீரிஸை இயக்க உள்ளனர். இவர்கள் இப்போது த பேமிலி மேன் தொடரின் அடுத்த பாகத்தை உருவாக்கி உள்ளனர். அதில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X