நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காத லவ் சீன்- ஸ்ருதியிடம் செய்த லவ் ப்ரப்போசல்
சென்னை: மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி , தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். பீசா ,சேதுபதி , நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், 96 என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி . அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவது எஸ்பி ஜனநாதன் அவர்கள் இவர் ஏற்கனவே இயற்கை , பேராண்மை, பொறம்போக்கு என பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதி வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு மீண்டும் எஸ்பி ஜனநாதன் அவர்களோடு இயக்கத்துல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களோடு சேர்ந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஸ்ருதிஹாசன் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார்.

ஸ்ருதிஹாசன் அறிமுகமான முதல் தமிழ் படம் ஏழாம் அறிவு. பின்னர் வேதாளம் ,சிங்கம் 3 என பல படங்களில் நடித்து இருக்காங்க. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என்று தனது எல்லா நண்பர்களிடம் சொல்லி வருகிறார்.
இந்த படத்தின் பெயர் லாபம். இந்த படத்தோட மியூசிக் டைரக்டர் இமான் . இந்த படம் விவசாயத்தை மையமாகக் கொண்ட திரைப் படம். இந்த படத்தோட ஷூட்டிங் ராஜபாளையத்தில் தான் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தப்படத்தில் தன் காதலை ஸ்ருதிஹாசனிடம் வெளிப்படுத்தும் தருணம் மிகவும் மெம்மரபில் மொமெண்ட் என்று பல பெட்டிகளில் சொல்லி வருகிறார். படத்தில் தனக்கு பிடித்த ஒரு காட்சியாக இதைக் கூறுகிறார் .
விஜய் சேதுபதி நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சுருத்தி ஹாசன் பல விதமான குத்து ஆட்டம் பாட்டம் எல்லாம் போட்டு பார்த்து ஒன்னும் கைய் கொடுக்க வில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ட்ந்து நடிப்பு பற்றிய சிந்தனையுடன் அப்பாவின் சில அட்வைஸ் டிப்ஸ்களுடன் வெற்றி பெற முயற்ச்சி செய்கிறார்.
விஜய் சேதுபதியுடன் லவ் செமிஸ்டரி ஒர்க் அவுட் ஆனால் இன்னொரு 96 த்ரிஷா போல் மக்கள் பேசுவார்கள். இந்த படம் பெயரில் மட்டும் லாபம் என்று இல்லாமல் ஒட்டு மொத்த டீம்முக்கும் லாபம் தரட்டும்.


Click it and Unblock the Notifications











