காணும் பொங்கல் அதுவுமா இணையும் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீசாகுது.

விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நாளை மாலை 5 மணிக்கு பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகின்றனர்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு வசனம்

வடிவேலு வசனம்

தளபதி விஜய்யின் போக்கிரி படத்தில் வைகைப் புயல் வடிவேலு பேசும் எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற காமெடி வசனமே தற்போது ரியோ ராஜின் அடுத்த படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

ரியோ ராஜின் முதல் படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை பிளாக்‌ஷீப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் இயக்கினார். இந்நிலையில், ரியோ ராஜின் இரண்டாவது படத்தை பத்ரி வெங்டேசன் இயக்குகிறார்.

யுவன் இசை

யுவன் இசை

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரியோ ராஜுக்கு இவ்வளவு சீக்கிரமாக யுவன் இசையில் ரொமான்ஸ் பண்ண சான்ஸ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் பாடல்கள் வேற லெவலில் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை தொடர்ந்து மீண்டும் இளம் நடிகருடன் ரம்யா நம்பீசன் கைகோர்த்துள்ளார். ரியோ ராஜும், ரம்யா நம்பீசனும் அப்படி என்னத்த பிளான் பண்ணி பண்றாங்கன்னு சீக்கிரமே பெரிய ஸ்க்ரீனில் பார்ப்போம்.

காணும் பொங்கல் ஸ்பெஷல்

காணும் பொங்கல் ஸ்பெஷலாக நாளை மாலை 5 மணிக்கு பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்கின்றனர். இதனை நடிகர் ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.

டப்பிங் ஆரம்பம்

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், டப்பிங்கில் படு பிஸியாக படக்குழுவினர் உழைத்து வருகின்றனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X