மாஸ்டர் செஃப்… பிரம்மாண்டமான சமையல் நிகிழ்ச்சி… மீண்டும் இணைந்து விஜய்சேதுதி,தமன்னா !
சென்னை : ஜெமினி தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார்.
மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் தெலுங்கு ப்ரொமோ சூட்டிங்கில் கலந்து கொண்டபோது விஜய் சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமன்னா.
இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் மழை போல் பொழிந்து வருகின்றன.

மாஸ்டர் செஃப்
சன் டிவியில் மிக பிரமாண்டமாக மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. அதனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார். இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது, இதில், விஜய் சேதுபதி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்து பேசும் வீடியோ அதிகம் வைரலானது.

தமன்னா
சன் தொலைக்காட்சியில் தமிழில் மாஸ்டர் செஃப் உருவாவது போல தெலுங்கில் ஜெமினி டிவியில் இந்த நிகழ்ச்சி தயாராக உள்ளது. தமிழில் டாப் நடிகரான விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல, தெலுங்கிலும் டாப் நடிகையான தமன்னா தொகுத்து வழங்க உள்ளார்.

விஜய்சேதுபதியுடன் தமன்னா
நடிகை தமன்னா முதன்முதலாக சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தோன்ற உள்ளார். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரொமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட தமன்னா, மாஸ்டர் செஃப் Coming soon என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே தாறுமாறாக அதிக லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதியுடன்
விஜய்சேதுபதியும் தமன்னாவும் தர்மதுரை என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த திரைப்படம் அனைவரும் விரும்பும் படங்களில் ஒன்றாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர்.

பல படங்கள் கைவசம்
க்ரைம், த்ரில்லர் திரைப்படமான நவம்பர் ஸ்டோரிஸ் என்ற இணையத் தொடரில் தமன்னா கடைசியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ஒடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. F3, Maestro, Seetimaar, That is Mahalakshmi என்ற தெலுங்கு படத்திலும், Bole chudiyan என்ற இந்தி படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











