விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகும் புதுப்படம்.. அந்த பிரபல நடிகரின் மகன் தான் இயக்குநராம்!

சென்னை: பாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், கோலிவுட் ரசிகர்களையும் மறக்காமல் அப்பப்போ படம் பண்ணி வருகிறார் நடிகை டாப்சி.

Recommended Video

Jyothika ok...Ramya Krishnan எப்படி ? | Dubbing artist Keerthika | Filmibeat tamil

நடிகை டாப்சி மற்றும் விஜய்சேதுபதி முதன் முறையாக இணையவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு தான் தற்போது ஹாட் டாப்பிக்.

பிரபல இயக்குநர் மற்றும் நடிகரின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பாலிவுட்டில் பிசி

பாலிவுட்டில் பிசி

பிங்க், மிஷன் மங்கள், தப்பட் போன்ற பவர்ஃபுல்லான படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆகி உள்ளார் நடிகை டாப்சி. மேலும், ராஷ்மி ராக்கெட், ஹசீன் தில்ருபா, லூப் லப்பேட்டா, சபாஷ் மித்து என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஜெயம் ரவியுடன்

ஜெயம் ரவியுடன்

தேசிய விருது வென்ற நடிகர் தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி, வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட பல கோலிவுட் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் ஜன கண மண படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

விஜய்சேதுபதியுடன்

விஜய்சேதுபதியுடன்

இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து முதன் முறையாக நடிக்க உள்ளார் டாப்சி. இந்த படத்தில் டாப்சி தான் லீடு ரோலில் நடிப்பதாகவும், விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்ற அப்டேட்டும் கிடைத்துள்ளன.

யாருடைய மகன்

யாருடைய மகன்

மைக் மோகனின் பயணங்கள் முடிவதில்லை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் சுந்தர்ராஜன், ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். அவரது மகன் தீபக் சுந்தர்ராஜன் தான் டாப்சி லீடு ரோலில் நடிக்க உள்ள இந்த படத்தை இயக்கவுள்ளார்.

தலைவி படத்தில்

தலைவி படத்தில்

இயக்குநர் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார் தீபக் சுந்தர்ராஜன். அவர் சொன்ன கதை நடிகை டாப்சிக்கு பிடித்துப் போகவே இந்த படத்தை ஓகே சொல்லி உள்ளார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி நடிப்பில்

விஜய்சேதுபதி நடிப்பில்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன், லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், க/பெ. ரணசிங்கம், கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல் என படிக்கும் போதே நம்மை மூச்சு வாங்க வைக்கும் அளவுக்கு ஏகப்பட்ட படங்கள் விஜய்சேதுபதியின் நடிப்பில் வரக் காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X