யுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்!
Recommended Video

சென்னை : 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அஞ்சலி.
இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. தற்போது இரண்டாவது முறையாக இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் இயக்குநர் அருண் குமார் 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர். 'பண்ணையாரும் பத்மினியும்' படம் சரியாகப் போகாவிட்டாலும், 'சேதுபதி' படம் செம வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். லிங்கா, விவேக் பிரசன்னா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் YSR ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து மலேசியா, தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











