Lubber Bandhu: பாலா சரவணனை முத்தமிட்டு வாழ்த்திய பிக் பாஸ் ஹீரோ.. உச்சகட்ட மகிழ்ச்சியில் படக்குழு

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது கருத்துக்களை இணையதளத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்த அனைவரும் பெரும்பாலும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த விஜய் சேதுபதி படத்தில் நடித்த நடிகர் பால சரவணனை நேரில் சந்தித்து முத்தம் கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள விஜயகாந்த் பாடலான பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் தற்போது இணையத்தில் அதிகம் உலா வரும் பாடலாக மாறி உள்ளது. படம் பார்த்த விஜயகாந்த் குடும்பத்தினர், படத்தில் கெத்து தினேஷ், விஜயகாந்த் ரசிகராக சிறப்பாகவே நடித்துள்ளார். படம் முழுவதும் கேப்டன் விஜயகாந்த் வருவது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், படத்தின் கதைக்களத்திற்கு பொறுத்தமானதாக உள்ளது. கேப்டனின் படங்களையோ, பாடல்களையோ படத்தில் பயன்படுத்துவதால் நாங்கள் என்றைக்கும் ராயல்ட்டி கேட்கமாட்டோம். காரணம், கேப்டன் எப்போதுமே உங்கள் சொத்து எனக் கூறினர். மறைந்த நடிகர் விஜயகாந்த் குடும்பத்தினர் இவ்வாறு கூறியது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

bala saravanan vijay sethupathi

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திக் உருவாகியுள்ளது லப்பர் பந்து படம். படத்தில் முதலில் அறிமுகம் செய்யப்படுவது அட்டக்கத்தி தினேஷைத்தான். தினேஷ் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவரது விக்கெட்டினை இப்படி பந்து வீசினால் வீழ்த்திவிட முடியும் என தனது சிறுவயதில் கண்டுபிடித்துச் சொல்கின்றார் ஹரிஷ் கல்யாண். தினேஷ் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் இல்லாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்தவராக உள்ளார். விளையாடும் இடத்தில் தினேஷ்க்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் மோதல் ஏற்படுகின்றது. அது முழுக்க முழுக்க ஈகோ மோதலாக உள்ளது. ஆனால் தினேஷ்தான், தனது காதலியின் அப்பா எனத் தெரியாமல் ஹரிஷ் கல்யாண் சண்டையிடுகின்றார். இறுதியில் என்ன ஆனது என்பது கதை.

bala saravanan vijay sethupathi

பால சரவணன்: படத்தில் அனைத்து கதபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகர்களில் நடிகர் பால சரவணனும் ஒருவர். இவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமும் அவர் பேசும் வசனங்களும் படம் முழுக்க அப்லாஸ்களை அள்ளியது. குறிப்பாக ஜெராக்ஸ் கடையில் அவர் பேசும் வசனங்களும் சரி, படம் முழுக்க தனது கதாபாத்திரத்தை உடல், உடல் மொழியில் வெளிக்காட்டியதிலும் சரி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

bala saravanan vijay sethupathi

பாராட்டு: இந்நிலையில் படம் பார்த்த விஜய் சேதுபதி, நடிகர் பால சரவணனை நேரில் சந்தித்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக நடிகர் பால சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " லப்பர் பந்து பார்த்துவிட்டு நேரில் அழைத்து..."பாலா டேய் உன்ன படத்துல அவ்ளோ ரசிச்சன்டா உனக்கு தியேட்டர்ல மக்கள் கைதட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருஞ்சுடா கல்கிட்டடா தம்பி..."னு கட்டி அனைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதுபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு முத்தங்களும்....Love u so much ணே..." என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X