அன்பை இப்படித்தான் பரிமாறுவாங்களாம்.. விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன்!

By

சென்னை: காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் சேதுபதி ஐதராபாத் சென்றுள்ளார்.

Recommended Video

Kathu vaakula rendu kaadhal: விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன் - வீடியோ

சிம்புவின் போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.

இந்தப் படம் ஹிட்டானது. இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

நயன்தாரா காதல்

நயன்தாரா காதல்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இதன் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நந்தா உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

இதையடுத்து அவர் இயக்கும் படம், காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நயன்தாரா, சமந்தா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோவும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது.

'அண்ணாத்த' ஷூட்டிங்

'அண்ணாத்த' ஷூட்டிங்

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அங்கு சென்றார். அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் இறங்கி செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாயின. பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொக்கேவை வீசி

பொக்கேவை வீசி

அதில், இருவரும் பொக்கேவை மாறி மாறி வீசி எறிந்துவிட்டு கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். அதற்கு கேப்ஷனாக, ஹீரோ என்ட்ரி. அன்பை பரிமாறிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் உங்களுடன் பணியாற்றுவது எப்போதும் ஸ்பெஷலானது. முன்பை விட இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மாறி மாறி பங்கேற்பு

மாறி மாறி பங்கேற்பு

நடிகை நயன்தாரா, ஏற்கனவே ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' பட ஷூட்டிங்கிற்காக அங்கு சென்றுள்ளார். அதனால், அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களின் ஷூட்டிங்கில் அவர் மாறி மாறி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கொரோனாவுக்கு பிறகு நடிகை சமந்தாவும் முதன்முறையாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X