விஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா?
விஜய் சேதுபதி பிறந்தநாள் பரிசாக சைரா நரசிம்மரெட்டி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி, சைரா நரசிம்மரெட்டி படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சிரஞ்சீவியின் 151வது படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது சைரா நரசிம்மரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதை ஆகும். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க, விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக அப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுளது.
அதில் விஜய் சேதுபதியின் பெயர் ராஜபாண்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் பெரிய கத்தியுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி.
பிறந்தநாளும் அதுவுமாக இவ்வளவு பெரிய கத்தியுடன் விஜய் சேதுபதி தோற்றமளிக்கும் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











