விஜய்சேதுபதி வில்லன் மெட்டீரியல் தான்.. ஹீரோ கிடையாது.. மாமனிதனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: கமர்ஷியல் படங்களைத் தான் காலி செய்கிறார் என பார்த்தால் சாதாரண பட்ஜெட் படத்துக்கும் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுப்பேன் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் படத்தைக் கிழித்துத் தொங்க விட்டு இருந்தார்.
Recommended Video
அதற்கு மனிதனை கொல்லலாம்.. மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது என இயக்குநர் சீனு ராமசாமி பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், வார இறுதி நாட்கள் முடிந்து வார நாட்களில் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ஆளே வரல, படம் ஃபிளாப்புன்னு நான் சொன்னது சரியாகி விட்டதா என்கிற ரீதியில் ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

மாமனிதனை கொல்ல முடியது
"இனிய மாறா
வணக்கம்
உங்கள்
விமர்சனத்திற்கு எனதன்பு
நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார்
வாங்க தனியா போகலாம் இல்லையா?
மனிதனை கொல்லலாம்
மாமனிதனை
உங்களால் கொல்ல முடியாது
tamiltalkies
நன்றி..." என இயக்குநர் சீனு ராமசாமி ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு பதில் ட்வீட் போட்டிருந்தார்.

மக்கள் ஏற்க மாட்டார்கள்
"பண்புள்ள சீனா... இனிய வணக்கம். மாமனிதனை இம்மண்னின் மனிதர்கள் கொண்டாடுகிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்களா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். அன்பிற்கு நன்றி.
குறிப்பு: தனிப்பட்ட மடலில் யாரையும் Tag செய்து துணைக்கு அழைப்பதில்லை. " என அவருடன் வம்புக்கு சென்றார்.

வசூல் இல்லை
இந்நிலையில், தற்போது மற்றொரு ட்வீட்டை போட்டு மீண்டும் இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதியை வம்பிழுத்துள்ளார். படம் ஓடவே இல்லை. பாக்ஸ் ஆபிஸில் வசூலே செய்யவில்லை. மக்கள் மாமனிதனை கண்டு கொள்ளவே இல்லை என கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

விஜய்சேதுபதி ஹீரோ கிடையாது
நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் 25 நாட்களை கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய்சேதுபதி ஹீரோ மெட்டீரியல் அல்ல, வில்லன் தான் என்றும் சோலோ ஹீரோவாக அவரால் வசூல் சாதனை படைக்க முடியாது என ட்ரோல் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த எல்லை மீறிய ட்ரோலை பார்த்த விஜய்சேதுபதி ரசிகர்கள் அவரை கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்ரம் படத்திற்கு முன்னதாக வெளியான விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 65 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? என்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் சினிமா பிரபலங்களை ட்ரோல் செய்ய வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











