விக்ரம் படத்தில் நடிக்க மிரட்டி சான்ஸ் கேட்ட விஜய் சேதுபதி... லோகேஷ் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தின் ரிலீஸ் வரும் ஜூன் 3ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் ரிலீஸ் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றுள்ளது.

விக்ரம் படம்
உலகநாயகன் கமல்ஹாசனின் பல படங்கள் மிகவும் பிரம்மாண்டமான அளவில் எடுக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அரசியல் உள்ளிட்ட காரணங்களால் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் எனர்ஜி
இந்தப் படத்தின் ட்ரெயிலர், டீசர், பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் பழைய சிறப்பான கமல்ஹாசனை பார்க்க முடிவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல சமீபத்தில் வெளியான படத்தின் பத்தல பாடலில் அவரது எனர்ஜி அதிகமாக காணப்படுகிறது.

ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்வு
நேற்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமின்றி, நடிகர் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
Recommended Video

சான்ஸ் கேட்ட விஜய் சேதுபதி
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதற்கு தான்தான் லோகேஷ் கனகராஜிடம் நேரில் சென்று வாய்ப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார். முதலில் லோகேஷ் கனகராஜ் மறுத்ததாகவும், பின்பு அங்கு சுற்றி இங்கு சுற்றி தன்னிடம்தான் வரவேண்டும் என்று தான் கொடுத்த மிரட்டலில் தனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமல் டைரக்ஷனில் நடிக்க ஆசை
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, கமல்ஹாசன் டைரக்ஷனில் நடிக்க தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ரசிகர்கள் மேளம் அடித்து தங்களது உற்சாகத்தை பதிவு செய்தனர். இதனால் அவர் பேசுவது சிறிது நேரம் தடைபட்டது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு ட்ரெயினிங் கொடுக்கப்பட்டுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி
அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் நடித்து வரும் இவர், கமல்ஹாசன் படத்தில் நடிக்கும் ஆசையில் லோகேஷ் கனகராஜிடம் மிரட்டி சான்ஸ் வாங்கியதும், அதை மேடையில் அப்படியே போட்டுடைத்ததும் ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











