Vijay Sethupathi: ஐஸ்வர்யா ராஜேஷ் பார்ட்டியில் விஜய் சேதுபதி.. ஒரே நடிகைகள் கூட்டமா இருக்கே!

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு பல படங்கள் தென்னிந்திய சினிமாவில் ரிலீஸ் ஆனது. இதில், தெலுங்கில் ரிலீஸ் ஆன படம் சங்கராந்திக்கு வஸ்துனம். இப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி என பலர் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய சங்கராந்திகி வஸ்துனம் படம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். செம காமெடியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. படம் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகள் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூபாய் 300 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

vijay sethupathi aishwarya rajesh

படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்திற்கு பெரும்பாலான பத்திரிகைகள் 3 முதல் 3.5 ஸ்டார்களை வழங்கியுள்ளனர். செம கமர்ஷியல் படமான இந்தப் படம் சரியாக பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆனது. அதேபோல் பொங்கலுக்கு முன்னர் ரிலீஸ் ஆன, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான கேம் சேஞ்சர் படம் பெரும் தோல்விப் படமாக மாறியது.

vijay sethupathi aishwarya rajesh

வரவேற்பு: இதனால் பல ரசிகர்கள் சங்கராந்திகி வஸ்துனம் படத்தினைப் பார்க்க, திரையரங்கிற்கு படை எடுத்தனர். இதனால் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது. படம் பார்த்த பல ரசிகர்களும் இது போன்ற செம காமெடியான படத்தினைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினர்.

vijay sethupathi aishwarya rajesh

வெற்றி: இப்படியான நிலையில் படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அனில் ரவிபுடி மீனாட்சி சௌத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள். காரணம் இந்தப் படத்திற்கு தொடர்பே இல்லாத, விஜய் சேதுபதி எப்படி இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.

vijay sethupathi aishwarya rajesh

கிசுகிசு: அதாவது ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அப்போது இவர்கள் இருவர் குறித்தும் பல கிசுகிசுக்கள் திரைத்துறையில் உலா வந்தது. இப்படியான நிலையில், இவர்கள், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமலும், நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்காமலும் இருந்தனர். இப்படியான நிலையில், ஐஸ்ர்வர்யா ராஜேஷ் நடித்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி கலந்து கொண்டது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இந்த பார்ட்டியில், நடிகை சங்கீதா, வாணி போஜன், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

vijay sethupathi aishwarya rajesh

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X