அமேசான் வெப்சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி சம்பளம் இவ்ளோ கோடியா? பாலிவுட் ஹீரோவை முந்தினார்!

By

சென்னை: வெப்சீரிஸில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பள விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர் என்பதற்கு உதாரணம், நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில், படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, போராடி வளர்ந்தவர் அவர்.

தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி, இப்போது முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார்.

யாதும் ஊரே

யாதும் ஊரே

தமிழில் இப்போது லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் உப்பென்னா, மலையாளத்தில் நித்யா மேனனுடன் 191 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு இந்தி வாய்ப்புகள் வந்துள்ளன.

காந்தி டாக்ஸ்

காந்தி டாக்ஸ்

அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம், சந்தோஷ் சிவன் இயக்கும் 'மும்பைக்கர்', ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்க இருக்கிறார். மேலும் இந்தியில் உருவாகும் காந்தி டாக்ஸ் என்ற மவுனப்படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார்.

ரூ.55 கோடி சம்பளம்

ரூ.55 கோடி சம்பளம்

இந்நிலையில், அவர் ஷாகித் கபூருடன் நடிக்கும் வெப்சீரிஸை அமேசான் பிரைம் தயாரிக்கிறது. இந்த சீரிஸுக்காக அவர் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.55 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. பாலிவுட் ஹீரோவான ஷாகித் கபூருக்கு ரூ.40 கோடிதானாம்.

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

தமிழில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் சேதுபதி ரூ.10 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் இந்தி வெப் தொடருக்கு இவ்வளவு ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொடரில், நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.

சமமான கேரக்டர்

சமமான கேரக்டர்

த பேமிலிமேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர். இந்த தொடரில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் இருவருக்குமே சமமான கேரக்டர் என்று படக்குழு கூறியுள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதன் மூலம் முதன்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகிறார்கள், விஜய் சேதுபதியும் ஷாகித் கபூரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X