Vijay Sethupathi: பாடலாசிரியராக மாறிய விஜய் சேதுபதி.. எல்லாம் பிக்பாஸ் கொடுத்த தைரியம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனால் ரசிகர்கள் யார் வெற்றியாளர் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். பலர், முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர், விஷால் இரண்டாவது இடத்தினையும், சௌந்தர்யா மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளார் என கூறிவருகின்றனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் தொகுப்பாளர், விஜய் சேதுபதி. இவர் நடிகர், தயாரிப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியான நிலையில் அவர், பாடலாசிரியராக உருவெடுத்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
விஜய் சேதுபதி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், துணை நடிகர், கேமியோ கதாபாத்திரம் என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு தனது 50 படங்களில் பரிமாணங்களைக் கொடுத்துள்ளார். அலட்டிக் கொள்ளாத இவரது நடிப்புதான் இவரை ரசிக்கும்படி செய்துள்ளது. கதாநாயகனாக அவரைக் கொண்டாடும் ரசிகர்கள், அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் கொண்டாடுகின்றனர்.

மற்ற கதாநாயகர்கள் நடிக்க தயங்குகின்ற, பல கதாபாத்திரங்களில் நடித்து அப்ளாஸ்களை அள்ளும் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டில் புதிய அத்தியாத்தை தனது பொதுவாழ்க்கையில் தொடங்கினார். அதாவது, பிக் பாஸில் 7 சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், சில காரணங்களால், வெளியேறினார். இதனால், பிக் பாஸ் குழு விஜய் சேதுபதியை அணுகியது. விஜய் சேதிபதியும் ஓ.கே. சொல்ல, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, அடியெடுத்து வைத்தார்.
பிக் பாஸ்: இவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஸ்டைல் மக்களுக்கு பிடித்துப் போனது. இது தொடர்பாக ரசிகர்கள், விஜய் சேதுபதி எவ்வாறு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றார் என வெளிப்படுத்தி வந்தனர். பல இடங்களில் சுற்றி வளைத்துப் பேசாமல், நேரடியாக அவர் கொடுத்த தக் லைஃப் பதில்கள் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது.

வசூல்: விஜய் சேதுபதி நடிப்பில் இதுவரை, 51 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டில் வெளியான மூன்று படங்களும் வெற்றி பெற்றது. அதிலும் இவரது 50வது படமான மகாராஜா படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டு, அங்கு ரூபாய் 70 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. படத்தை ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றது.

பாடலாசிரியர்: நடிகராக, தயாரிப்பாளராக, தொகுப்பாளராக வெற்றி கண்ட விஜய் சேதுபதி, தற்போது பாடலாசிரியர் அவதாரமும் எடுத்துள்ளார். அதாவது, அவர், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் படத்தில், பிக் பாஸ் சீசன் 5இன் வெற்றியாளர், ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகின்றார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள, ஏதோ பேசத்தானே என்ற பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இந்தப் பாடல் மூலம் அவர் பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார். நடிகர் சித்தார்த் மற்றும் ஷில்ஃபா ராவ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்கள். இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











