»   »  மீண்டும் சுமார் மூஞ்சி குமார் ஆகும் விஜய் சேதுபதி?

மீண்டும் சுமார் மூஞ்சி குமார் ஆகும் விஜய் சேதுபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுலின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளாராம்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. பார்க்க பக்கத்து வீட்டுப் பையன் போன்று இருப்பதாலேயே அவரை பலருக்கு பிடித்துள்ளது.

தனது படங்களில் அவர் ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லும் வேலை எல்லாம் செய்யாமல் தியேட்டருக்கு வருபவர்களை ரசிக்க வைக்கிறார்.

பிறந்தநாள் பார்ட்டி

பிறந்தநாள் பார்ட்டி

விஜய் சேதுபதி கடந்த 16ம் தேதி தனது 37வது பிறநந்தாளை கொண்டாடினார். அவர் எளிமையாக நெருக்கமானவர்களுக்கு மட்டும் அளித்த பார்ட்டியில் இயக்குனர் கோகுல் கலந்து கொண்டார்.

சுமார் மூஞ்சி குமாரு

சுமார் மூஞ்சி குமாரு

கோகுல் இயக்கிய இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சுமார் மூஞ்சி குமாராக நடித்து புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி. இந்த படம் கோகுலுக்கும், விஜய் சேதுபதிக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

மீண்டும்

மீண்டும்

பிறந்தநாள் பார்ட்டியில் கோகுல் விஜய் சேதுபதிக்கு ஒரு கதையை சொல்ல அது அவருக்கு பிடித்துவிட்டதாம். கையில் இருக்கும் படங்களை முடித்த பிறகு நிச்சயம் நடிக்கிறேன் என்று அவர் கோகுலுக்கு வாக்கு கொடுத்துள்ளாராம்.

பாகம் 2

பாகம் 2

கோகுல், விஜய் சேதுபதி மீண்டும் இணையும் படம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

நானும் ரவுடி தான்

நானும் ரவுடி தான்

விஜய் சேதுபதி தற்போது நானும் ரவுடி தான் படத்தில் நடித்து வருகிறார். கோகுல் கார்த்தி, நயன்தாராவை வைத்து காஷ்மோரா படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi is set to act in Idharkudhaane Aasaipattai Balakumara (IAB)'s director Gokul's movie.
Please Wait while comments are loading...