Bigg Boss Tamil 8: இந்தவாரம் டபுள் ட்ரீட்.. வெளியேறப்போகும் இரண்டு போட்டியாளர்கள் இவர்களா? விபரம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது எனக் கூறினால் நம்பவா முடிகின்றது எனக் கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த சீசன் போய்க்கொண்டு உள்ளது. காரணம் இந்த சீசனின் முதல் சில வாரங்கள் ரசிகர்களுக்கு பெரும் சலிப்பை ஊட்டியது என்றுதான் கூறவேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக தங்களை மக்கள் முன் நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இப்போதும் உள்ளது. இப்படியான நிலையில் இந்தவாரம் அதாவது, 8வது வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை, ஃபேட்மேன் ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா, சுனிதா, ரியா , வர்ஷினி என 6 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே வீட்டில், முத்துக்குமரன், வி.ஜே. விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாஞ்சனா, ராயன், மஞ்சரி, ஷிவ்குமார், ராணவ் மற்றும் ஆனந்தி என 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

bigg boss 8 tamil vijay sethupathi sachana anandhi

கடந்த வாரமே 49 நாட்கள் ஆன நிலையில், இன்னும் ஐம்பது நாட்கள்தான் உள்ளது. ஆனால் போட்டியாளர்கள் உள்ளே மட்டும் 18 பேர் உள்ளார்கள். இப்படியான நிலையில், யார் இந்த வீட்டில் இருந்து வரும் வாரங்களில் வெளியேறப்போகின்றார்கள் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. குறிப்பாக ரசிகர்கள் மத்தியில், டபுள் எவிக்‌ஷன் உள்ளதா என்ற கேள்வி இருந்து வந்தது. இதுமட்டும் இல்லாமல், மிட் வீக் எவிக்‌ஷன் இருக்கின்றதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

நாமினேஷன்ஸ்: அந்த வகையில் இந்த வாரம் அதாவது 8வது வாரத்தில் எலிமினேஷனுக்காக மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஜாக்குலின், அன்ஷிதா, ரயான், மஞ்சரி, ஷிவ்குமார், விஷால், சத்யா, ரஞ்சித், ஆனந்தி, சாச்சனா என மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கின்றதா என்ற கேள்வியோடு காத்துக் கொண்டு உள்ளனர். இது தொடர்பாக பிக்பாஸ் தரப்பில் இருந்தும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் சனிக்கிழமை அதாவது இன்று, ஒரு போட்டியாளரும், நாளை மற்றொரு போட்டியாளரும் எலிமினேட் செய்ய பிக்பாஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

bigg boss 8 tamil vijay sethupathi sachana anandhi

டபுள் எவிக்‌ஷன்: அந்த வகையில், இன்று போட்டியாளர் சாச்சனா எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நாளை ஆனந்தி எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் சாச்சனா ஏற்கனவே பிக்பாஸ் சிசன் 8 தொடங்கி 24 மணி நேரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர். அதன் பின்னர் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற பிக் பாஸ் தரப்பு, சாச்சனாவை மீண்டும் வீட்டிற்குள் அனுமதித்தது.

அதிர்ச்சி: இப்படியான நிலையில் அவர் இந்தவாரம் வெளியாகவுள்ளார் என கூறப்படுகின்றது. அதேபோல், மற்றொரு போட்டியாளரான ஆனந்தி, இந்தவாரம் வெளியேறப்போகும் மற்றொரு போட்டியாளர் என்பதால் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளது. காரணம் பிக் பாஸ் வீட்டில் யாருடைய நிழலிலும் இல்லாமல், தைரியமாக விளையாடிவரும் போட்டியாளர்களில் ஆனந்தியும் ஒருவர். அவர் வெளியேறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X