பிக் பாஸ் 8 கிராண்ட் பினாலே: முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய் சேதுபதி.. டிஆர்பி-யில் சாதனை!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமில்லாமல், இந்தி,தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழி பேசும் ரசிகர்களுக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இந்தியில் 18 சீசன் முடிந்துள்ளது. அதே போல தமிழில் ஏழாவது சீசன் முடிந்துள்ளது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், டிஆர்பி ரேட்டிங் புது சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு பிக் பாஸ் தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கமலை திரைப்படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும் என்ற நிலைமை இருந்த நிலையில், வாராவாரம் தொலைக்காட்சியிலே கமலஹாசன் பேசுவதையும் கேட்க முடியும் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதுவும் குறிப்பாக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு, மூன்று என பல சீசன்கள் ஒளிபரப்பானது.

bigg boss season 8 vijay sethupathi trp

கடும் விமர்சனம்: பிக் பாஸ் ஆறாவது சீசனில், கமலஹாசன் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அதாவது, பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கடும் விமர்சனத்துக்கு உள்ளன கமலஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடாது. வேறு யாராவது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்கிற அளவுக்கு இணையத்தில் அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமலஹாசன் அறிவித்தார்.

பிக் பாஸ் சீசன்8: அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்பபோவது யார் என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக விஜய் டிவி நிர்வாகம் அறிவித்தது. இந்த நிகழ்ச்சிக்கு அவர் சரிப்பட்டு வருவாரா என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல முதல் எபிசோடிலேயே விஜய் சேதுபதி ரசிகர்களை கவர்ந்துவிட்டார். ஆனால், போட்டியாளர்கள் பேசுவதை கேட்பதில்லை, நேரடியாக பேசுகிறேன் என்று அவர்களை அவமானப்படுத்துகிறார் என்றெல்லாம் இணையத்தில் ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ஒரு சிலர் விஜய் சேதுபதியின் இந்த ஸ்டைல் தான் சூப்பர் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதிய சாதனை: இந்நிலையில், அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் 8 கிராண்ட் பினாளே நிகழ்ச்சி 6.88 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் பைனலுக்கான டிஆர்பி ரேட்டிங்கை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி தன்னுடைய வெளிப்படையான பேச்சாலும், கலகலப்பான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்று விஜய் சேதுபதியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என விஜய் டிவி நிர்வாகமே பைனலிலேயே அறிவித்துவிட்டது. இதற்கு காரணம் இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்கிய எபிசோட்டைகள் ரசிகர்கள் விரும்பி பார்க்கப்பட்டது என்பது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X