Bigg Boss Tamil 8: மொளகா பஜ்ஜி மாதிரி இருக்கணும்.. விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் கொடுத்த பப்ளிக்.. செம!

சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. பிக்பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என விஜய் டிவி தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 8வது சீசனின் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

vijay sethupathi bigg boss season 8

இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசனுக்கு விஜய் டிவியும் பிக் பாஸ் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே உலகநாயகன் கமல் ஹாசன் தான் பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக கூறினார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது.

vijay sethupathi bigg boss season 8

பிக்பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என விஜய் டிவி தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்குமே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை அவருக்கு அடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார் என அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

vijay sethupathi bigg boss season 8

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8இன் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் ப்ரோமோ தமிழ் நாட்டில் உள்ள 10 முக்கியமான நகரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் உள்ள பெசண்ட் நகர் பீச், விருதுநகரில் உள்ள அப்சரா திரையரங்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்ச குப்பம் பகுதியில் ப்ரோமோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவையில் உள்ள பிரமாண்டமான மைதானமான கொடீசியா மைதானத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் பெரிய திரையில் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியிலும், திருநெல்வேலியில் உள்ள பெல் பள்ளி வளாகத்திலும், திருச்சியில் உள்ள ப்ரீஷ் ஹோட்டலிலும், வேலூரில் பழைய பேருந்து நிலையத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

vijay sethupathi bigg boss season 8

ப்ரோமோ ரிலீஸ்: அதேபோல், மதுரையில் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஈரோட்டில் வெள்ளாளர் மகளிர் கல்லூரியிலும், ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், ப்ரோமோ மக்களையும் பிக் பாஸ் ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சீசன் 8இன் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் அறிவுரை கூறும் விதமாக ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ளது.

vijay sethupathi bigg boss season 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X