விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் இதுதான்.. நிஜ வாழ்க்கையில் இருந்த நபராம்!
சென்னை: விடுதலை படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் நிஜ வாழ்க்கையில் இருந்த ஒரு நபரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடுதலை. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர்.
இயக்குநர் கவுதம் மேனனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

சூரி போலீஸ்
இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் எல்ரெட் குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாகவும் விஜய் சேதுபதி வயதான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

சம்பந்தம் இல்லை
அதுமட்டுன்றி வீரப்பன் குறித்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் வீரப்பனுக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று படக்குழு தெரிவித்தது.

நிஜ வாழ்க்கையில் இருந்த நபர்
இந்நிலையில் விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை சித்தரிப்பார் என்றும் தெரிகிறது. "80 களில் தமிழ் தேசியம் குழுமத்தை சேர்ந்த வாத்தியார் என்ற நபர் ஆசிரியராக இருந்தார். அவர் பல நல்ல செயல்களைச் செய்தார்.

தோற்றத்தில் மாற்றம்
இப்படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். உண்மையில், கதை அவரது கதாபாத்திரம் மற்றும் அவரது படைப்புகளைச் சுற்றி வருகிறது. அவரது தோற்றத்திற்கு ஏற்ப விஜய் சேதுபதியின் தோற்றத்தில் மாற்றம் செய்ய படக்குழு முயற்சித்து வருகிறது.

கொரோனா முடிந்தவுடன்
விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்றது. இதில் பெரிய போலீஸ் கேம்ப்பை அமைத்து 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கொரோனா முடிந்தவுடன் மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











