‘பிசாசு 2’ திகில் காட்சிகள் எக்கச்சக்கம் … நல்ல செய்தி சொன்ன மிஸ்கின்!
சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கி வரும் மிஸ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார். .
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
பிசாசு 2 படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில், இப்படம் குறித்த சூப்பரான அப்டேட்டை மிஸ்கின் வெளியிட்டுள்ளார்

நல்ல பேய்
பேய் திரைப்படங்கள் என்றாலே கொல்லும்... பயமுறுத்தும். அதுவும் பிசாசுனா கேட்கவே வேண்டாம் படமே திகிலா இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில். பிசாசு படத்தில் வந்த பேய் தேவதையா வந்து அனைவரையும் கவர்ந்தது. பிசாசு படத்தில், நல்லது செய்யும் பேய் என ஒரு விசித்திரமான கதையை நமக்கு கொடுத்து இருப்பார் மிஷ்கின். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இல்ல வரவேற்பை பெற்றது.

ஆண்ட்ரியா
பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இருட்டு,திகில் காட்சிகள் என டீசர் அனைவரையும் பயமுறுத்தியது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டீசர் வெளியானது.

நல்ல செய்தி
இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. தற்போது அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து படம் அக்டோபர் மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தனது டப்பிங்கை முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











