அந்த ஹீரோவின் படத்தில் இருந்து விலகியது உண்மைதான்.. உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி!

By

சென்னை: அந்த ஹீரோவின் படத்தில் இருந்து, தான் விலகிவிட்டது உண்மைதான் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vijay Sethupathi Undergoing Depression • Sushant Singh

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படம், புஷ்பா.

இதை சுகுமார் இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

வித்தியாசமான கெட்டப்

வித்தியாசமான கெட்டப்

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியான அன்றே பரபரப்பானது. இந்த போஸ்டர் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது.

வன அதிகாரி

வன அதிகாரி

இது செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் தெலுங்கு பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

கன்னட ஹீரோ தனஞ்செயா

கன்னட ஹீரோ தனஞ்செயா

விஜய் சேதுபதிக்குப் பதிலாக, கன்னட ஹீரோ தனஞ்செயா நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இவர் ஏற்கனவே பைரவ கீதா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்தப் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பாபி சிம்ஹாவை நடிக்க வைக்கவும் பேசி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

நடிக்க இயலாது

நடிக்க இயலாது

விஜய் சேதுபதி விலகியதற்காக காரணமும் உடனடியாகத் தெரியவில்லை. இந்நிலையில், தான் 'புஷ்பா'வில் இருந்து விலகிவிட்டதாக, நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுகுமாரை நேரில் சந்தித்ததாகவும் அப்போது தனக்கு கால்ஷீட் பிரச்னை இருப்பதால், புஷ்பா படத்தில் நடிக்க இயலாது என்று அவரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X