வாளால் கேக் வெட்டிய விஜய் சேதுபதி.. வைரலாகும் போட்டோ.. சரமாரி கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி பட்டா கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாள் இன்று..!

சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, போராடி வளர்ந்த நடிகர்களின் லிஸ்ட்டில் விஜய் சேதுபதிக்கும் இடம் உண்டு.

வில்லனுக்கு அடியாளாக, கூட்டத்தில் ஒருவராகத்தான் ஆரம்பத்தில் நடித்து வந்தார், விஜய் சேதுபதி.

முக்கியமான நடிகர்

முக்கியமான நடிகர்

தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் அவர் தனது தொடர்ந்த முயற்சியாலும் போராட்டத்தாலும் முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'தென்மேற்கு பருவக்காற்று' படம் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார்.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

இதையடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தர பாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா என அவர் நடித்தப் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகின. இப்போது விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார்.

ஒரு கதை சொல்லட்டுமா?

ஒரு கதை சொல்லட்டுமா?

அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. விக்ரம் வேதா படத்தில் அவர் பேசும், ஒரு கதை சொல்லட்டுமா சார் உட்பட பல வசனங்கள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க ஆர்வம் காட்டிய அவர், சர்ச்சையில் சிக்கினார்.

பிறந்த நாள் கேக்

பிறந்த நாள் கேக்

இந்நிலையில் அவருக்கு இன்று 43 வது பிறந்த நாள். அதை முன்னிட்டு, நீண்ட வாளால், மேஜையில் வைக்கப்பட்டு இருக்கும் பிறந்த நாள் கேக்கை சிரித்தபடி வெட்டுகிறார். அருகில் இயக்குனர் பொன்ராம் சிரிக்கிறார். மேலும் சிலரும் அந்தப் புகைப்படத்தில் இருக்கின்றனர். கேக் வெட்டும் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இப்படி செய்வது சரிதானா?

இப்படி செய்வது சரிதானா?

அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சில நெட்டிசன்ஸ், வாளால் கேக் வெட்டியை சிலரை போலீசார் கைது செய்தனர். ஒரு முன்னணி நடிகர் இப்படி வெட்டுவது சரிதானா? அதே போன்ற நடவடிக்கையை இவர் மீது எடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்டினால் என்னாவது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X