»   »  'ராமன் கெட்டவனா.. ராவணன் கெட்டவனா..' - விஜய் சேதுபதி பேசிய வசனம் நீக்கம்!

'ராமன் கெட்டவனா.. ராவணன் கெட்டவனா..' - விஜய் சேதுபதி பேசிய வசனம் நீக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கும் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

ஆறுமுக குமார் இயக்கிய இந்தப் படத்தின் டீசரில், ராமாயணத்தில் வரும் ராமன் மற்றும் ராவணனைப் பற்றிய வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த டீசரில் இடம்பெற்ற ராமன் குறித்த வசனங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது படத்திலிருந்து அந்த வசனங்களை நீக்கி இருக்கின்றனர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கௌதம் கார்த்திக், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பல கெட்டப்புகளில் வருகிறார்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீசர்

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசரில் "ராமன் கெட்டவனா... ராவணன் கெட்டவனா..." என விஜய் சேதுபதி வசனம் பேசுவது இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமன் கடவுளா

ராமன் கடவுளா

"ராவணன் சீதையைத் தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வெச்சுருந்தானா.. அவனை நாம அரக்கன்னு சொல்றோமா... ராமன் சீதையைக் காப்பாத்தி கொண்டுபோய் அவளைச் சந்தேகத் தீயில போட்டு எரிச்சானா... அவன நாம கடவுள்னு சொல்றோமா..." என வசனம் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

"ராமனும் நான் தான் ராவணனும் நான் தான்" என மிரட்டலாகச் சொல்கிறார் விஜய் சேதுபதி. ராமனை தவறாகச் சித்தரிப்பது போல இந்த வசனம் இருப்பதாக டீசர் வெளிவந்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது ராம பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

படத்திலிருந்து வசனம் நீக்கம்

படத்திலிருந்து வசனம் நீக்கம்

"நாம ஜாலிக்காக படம் எடுக்கிறோம். நாம எடுக்கிற படம் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக்கூடாது" என்று விஜய் சேதுபதி கூறியதையடுத்து அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலான வேறு வசனம் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Vijay Sethupathi and Gautham Karthik starring 'Oru Nalla Naal Paathu Solren' teaser was released a few weeks ago. 'Oru Nalla Naal Paathu Solren' teaser contains controversial dialogues about Raman ana Ravana. Many have protested against the teaser and now the dialogues are removed from the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X