அந்த மனசுக்குத் தான் அவர் மக்கள் செல்வன்.. மாவீரன் படத்தில் விஜய்சேதுபதியின் சம்பளம் என்ன தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் மாவீரன் படத்திற்கு விஜய்சேதுபதி கொடுத்துள்ள வாய்ஸ் ஓவர் படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது.

'வீரமே ஜெயம்' என சொல்லி கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அசரீரி குரலாக மாறி அவருக்குள் இருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பும் வேலையை இந்த படத்தில் விஜய்சேதுபதியின் குரல் செய்துள்ளது.

Vijay Sethupathi didnt get a single penny for Maaveeran voice over

படத்தில் விஜய்சேதுபதியின் குரல் வரும் இடங்களில் எல்லாமே செம ஆக்‌ஷன் பிளாக் களைகட்ட விஜய்சேதுபதி இந்த படத்தில் என்ன சம்பளம் பா வாங்கினாரு என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை: சில முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு தங்கள் ரசிகர்களை போட்டி நடிகர்களின் ஹேட்டர்களாகவே வளர்த்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்து வரும் நிலையில், இளம் தலைமுறை நடிகர்களான விஜய்சேதுபதியும் சிவகார்த்திகேயனும் அந்த தவறை செய்யாமல் ஒருவருக்கு ஒருவர் ஸ்போர்ட்டிவாக செம பாண்டிங் உடன் இருந்து வருகின்றனர்.

விஜய்சேதுபதி நடித்த றெக்க படத்தில் சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸை விஜய்சேதுபதி வைத்திருந்த நிலையில், மாவீரன் படத்தில் ஒரு படி மேலே சென்று விஜய்சேதுபதியின் குரலை கேட்டே தனக்கு வீரம் வருவது போல சிவகார்த்திகேயன் நடித்து மாஸ் காட்டி உள்ளார்.

விஜய்சேதுபதி சம்பளம்: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு 3 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி விஜய்சேதுபதி டப்பிங் பேசியதாக தகவல்கல் வெளியாகி உள்ளன. ஆனால், ஒரு ரூபாய் கூட சம்பளமாக விஜய்சேதுபதி வாங்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் மற்றும் மடோன் அஸ்வின் மீதுள்ள நட்பு காரணமாக இதை செய்து கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி என்கின்றனர்.

மக்கள் செல்வன்னு சும்மாவா சொல்றாங்க, அவரோட மனசே மனசு தான் என இதை அறிந்த விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மாமனிதனை கொண்டாடி வருகின்றனர்.

Vijay Sethupathi didnt get a single penny for Maaveeran voice over

ஆரோக்கியமான விஷயம்: எதிர்காலத்தில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது, ஒருத்தர் படத்தில் ஒருத்தர் கேமியோவாக வருவது என்பதெல்லாம் ரொம்பவே வரவேற்கத் தக்க ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அனிருத் மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களுக்கு பாடி கொடுத்தாலும் சம்பளம் வாங்க மாட்டார் எனச் சொல்லுவார்கள், கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடிக்க சம்பளமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியும் அந்த ரூட்டை பிடித்திருப்பது நல்ல விஷயம் என சினிமா வட்டாரத்தில் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X