அந்த கம்பெனி ரகசியத்தை சொல்ல முடியாது.. படத்தை மட்டும் வந்து பாருங்க.. விஜய் சேதுபதி நச் பதில்!

ஹைதராபாத்: விடுதலை 2 திரைப்படம் இந்த வாரம் டிசம்பர் 20ம் தேதி பெரிதாக எந்தவொரு போட்டியும் இல்லாமல் வெளியாகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

விடுதலை முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2ம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. முதலில் சூரியை வைத்து இந்த படத்தை இயக்க ஆரம்பித்த வெற்றிமாறன் விஜய் சேதுபதியை 4 நாட்கள் கேமியோ ரோலில் நடிக்க மட்டுமே அழைத்ததாக கூறினார்.

vijay sethupathi viduthalai 2 vetrimaaran 2


ஆனால், அதன் பின்னர் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் பெரிதாக வளர்ச்சியடைந்த நிலையில், 2ம் பாகத்தை தாண்டி 3ம் பாகமே உருவாகும் போலத் தெரிகிறது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த படத்துக்கான புரமோஷனை தீவிரப்படுத்தியுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தில் டீ ஏஜிங் பயன்படுத்தப்பட்டதா என்கிற கேள்விக்கு நறுக்கென பதில் அளித்துள்ளார்.

2ம் பாகம் சாபம் முடியுமா?: சிங்கம் 2 படம் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அரண்மனை 4ம் பாகமே இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், சாமி 2, சண்டக்கோழி 2, இந்தியன் 2 கடைசியாக வந்த சூது கவ்வும் 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை ரொம்பவே சோதித்து விட்டன. இந்நிலையில், பார்ட் 2 சாபத்தில் இருந்து விடுதலை பெறுமா விடுதலை 2 என்கிற கேள்வி எழுந்துள்ளது. புஷ்பா 2 படத்தை போல கோலிவுட்டுக்கு ஒரு நல்ல வெற்றிப்படமாக விடுதலை 2 அமையும் என்றும் திரையுலகினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வெறித்தனமான புரமோஷன்: பிக் பாஸ் வீடு முதல் ஹைதராபாத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் வெறித்தனமான புரமோஷனை விடுதலை 2 டீம் செய்துள்ளது. பெரும் பொருட்செலவில் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு ந்டைபெற்ற நிலையில், தயாரிப்பாளருக்கு எப்படியாவது லாபத்தைக் கொடுக்க வேண்டும் என வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முயற்சி செய்து புரமோஷன் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்கெல்லாம் சென்று மஞ்சு வாரியர் இந்த வயதிலும் ஆட்டம் போட்டு புரமோஷன் செய்வதை எல்லாம் இளம் நடிகைகள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?: சமீபத்தில் நடைபெற்ற விடுதலை 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது விடுதலை 2 படத்தில் உங்களுடைய இளமையான தோற்றத்துக்கு டீ ஏஜிங் பண்ணியதாக கேள்விப்பட்டோம். அது உண்மையா சார்? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. உடனடியாக அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு, படத்தை வந்து பாருங்க, படம் புடிச்சிருக்கா, இல்லையான்னு சொல்லுங்க, சினிமாவில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தான் எடுக்கிறோம். ஆனால், அதையெல்லாம் பார்வையாளர்களாக நீங்கள் ஏன் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்க என கேள்வி எழுப்பி அந்த நபரை விஜய் சேதுபதி ஆஃப் செய்து விட்டார்.

மாஸ் காட்டிய மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்தியாவில் 103 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், சீனாவில் 80 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளது. அங்கேயும் 100 கோடி ரூபாய் வரை வசூல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விடுதலை 2 திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு வசூல் வேட்டை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X