VijaySethupathi: “வேற லெவல் ஸ்க்ரிப்ட்..” மீண்டும் வெற்றிக் கூட்டணியில் விஜய் சேதுபதி.. ஹாட் அப்டேட்
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.
இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, தற்போது தமிழில் பிஸியாகிவிட்டார்.

இதனிடையே சமீபத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.
இதனையடுத்து மீண்டும் வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளாராம் விஜய் சேதுபதி.
மெகா கூட்டணியில் விஜய் சேதுபதி
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது சினிமா கேரியரைத் தொடங்கியவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோ லிஸ்ட்டில் இடம் பிடித்த விஜய் சேதுபதி, தற்போது டோலிவுட், பாலிவுட் என மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.
அதேநேரம், விக்ரம், ஜவான் என விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. இதனால் அவருக்கு தொடர்ச்சியாக வில்லன் வாய்ப்புகளே தேடி வருவதாக சொல்லப்படுகிறது. இன்னொருபக்கம் தனது 50வது படமான மகாராஜாவில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து அவரது நடிப்பில் மேலும் சில படங்கள் உருவாகவுள்ளன.
இந்நிலையில், மீண்டும் வெற்றிக் கூட்டணியில் இணைய விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளாராம். விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் சூது கவ்வும். நலன் குமாரசாமி இயக்கிய இந்தப் படம் தான் விஜய் சேதுபதியை வேற லெவலில் கொண்டுச் சென்றது. சூது கவ்வும் மூவியை தொடர்ந்து விஜய் சேதுபதி - நலன் குமாரசாமி கூட்டணி காதலும் கடந்து போகும் படத்தில் இணைந்தது.
விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்த இந்தப் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. மீண்டும் இக்கூட்டணி இணையுமா என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. கார்த்தியின் வா வாத்தியாரே படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டுடியோ க்ரீன் பேனரில் இன்னொரு படம் இயக்கவுள்ளார் நலன் குமாரசாமி.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதிக்காக நலன் குமாரசாமி வேற லெவலில் ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மேலும் ஹீரோக்கள் இணையவுள்ளதாகவும், இந்தப் படத்தின் அப்டேட் வெளியானதுமே எதிர்பார்ப்பு தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











