மாஸ்டர் படத்திற்காக விஜய் சேதுபதி இவ்வளவு மெனக்கெட்டாரா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி செய்த வேலை குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளதாலேயே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படத்தில் மலையாள நடிகையான மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கொடூர வில்லன்
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு கொடூர வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அடிக்கடி ஏதாவது ஒரு தகவல் வெளியே கசிந்த வண்ணம் உள்ளது. அதன் படி மாஸ்டர் படத் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தயாரிப்பு தரப்பு மறுப்பு
மேலும் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்த தயாரிப்பு தரப்பு மாஸ்டர் பெரிய பட்ஜெட் படம் என்பதால் என்ன நடந்தாலும் மாஸ்டர் படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என தெரிவித்தது.

மாஸ் ட்ரீட்
இதனை தொடர்ந்து சுதந்திர தினமான நாளை, மாஸ்டர் படத்தின் மாஸ் ட்ரீட் ஒன்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விக்னேஷ் எழுத்தில் அனிருத் குரலில் இடம்பெற்றுள்ள Quit பண்ணுடா என்ற பாடல் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

மகேந்திரனுக்கு டப்பிங்
இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக விஜய் சேதுபதி செய்த வேலை குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கும் சேர்த்து விஜய் சேதுபதியே டப்பிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக மெனக்கெடு
தனது சிறுவயது குரலில் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காக விஜய் சேதுபதி இப்படி மெனக்கெட்டு இதை செய்துள்ளாராம். அண்மையில் தாடி மீசையுடன் விஜய் சேதுபதி புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











