விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி?

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில், விஷாலின் ஆக்‌ஷன் படம் ரிலீசாகவுள்ளது.

சென்னை: இந்த தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள பிகில் மற்றும் கைதி படங்களுடன் போட்டி என அறிவித்த விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து பின்வாங்கியது.

தற்போது, சங்கத்தமிழன் படம் அடுத்த மாதம் நவம்பர் 15ம் தேதிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் விஷாலின் ஆக்‌ஷன் படமும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படமும் ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கியது

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கியது

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 64 படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதால், லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விஜய்யின் பிகில் படங்களுடன் போட்டி தேவையில்லை என சங்கத்தமிழன் கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

விக்ரம் வேதா, 96 என இரு படங்களை தவிர விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், பெரிய நடிகர்கள் படங்களுடன் போட்டி போட வேண்டாம் என்ற நிலையை தயாரிப்பு தரப்பு எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

தீபாவளி ரேசில் விஜய், கார்த்தி படங்களிடம் இருந்து தப்பித்த விஜய்சேதுபதி படம், அடுத்த மாதம் நவம்பர் 15ம் தேதி வெளியாக திட்டமிட்டுள்ளது.

ஆனால், அன்றைய தேதி சுந்தர். சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படமும் அதே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் விஜய்சேதுபதிக்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.

அசுரனால் தீர்ந்தது சிக்கல்

அசுரனால் தீர்ந்தது சிக்கல்

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இதுவரை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வரும் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டிய அசுரனின் அசுர வெற்றியால், தயாரிப்பு தரப்பு பஞ்சாயத்துகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சிக்கல் இல்லாமல் நவம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X