Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மொதல்ல லாரன்ஸ்.. இப்போ விஜய்சேதுபதி.. கமலின் விக்ரம் படத்தில் இருந்து கழண்டு கொள்ள அதுதான் காரணமா?
சென்னை: கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் ஏன் செட்டே ஆக மாட்டுதுன்னே தெரியவில்லையே.. இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது விக்ரம் படத்தில் இருந்தும் விஜய்சேதுபதி விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் விக்ரம்.
டாக்டர் படம் ரீலீஸ்.. ஓடிடியிலா.. தியேட்டரிலா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
முதலில் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் சில காரணங்களுக்காக இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக பின்னர் தகவல்கள் வெளியாகின.
கமலின் விக்ரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகவுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம்ட் ஹான் விக்ரம். டைட்டில் டீசரிலேயே ஆரம்பிக்கலாங்களா என விருந்து வைத்து வெயிட் காட்டி இருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
வெளியேறிய லாரன்ஸ்
இந்த படத்தில் முதன்முறையாக கமலுக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. புது காம்பினேஷன் பக்கா மிரட்டலாக இருக்குமே என எதிர்பார்த்த கமல் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமாக சில பல காரணங்களுக்காக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்கிற தகவல் வெளியானது.
பகத் ஃபாசில்
இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா உடன் பாட்டு படத்தில் நடித்து வரும் பகத் ஃபாசில் இன்னமும் விக்ரம் படத்தில் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதியும் எஸ்கேப்
பகத் ஃபாசில் மட்டுமில்லை நடிகர் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கமலுடன் இணைந்து நடிக்கப் போவதாக வெறித்தனமான அப்டேட்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
சம்பளம் பத்தல
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லன் பவானியாக மிரட்டிய விஜய்சேதுபதி மீண்டும் லோகேஷ் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார் என்கிற தகவலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில், விஜய்சேதுபதிக்கு பேசப்பட்ட சம்பளம் போதுமானதாக இல்லை என்கிற காரணத்திற்காகவே அவர் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும்
ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் கமல் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து விட்டார் நடிகர் விஜய்சேதுபதி. சிம்பு, சித்தார்த் என பேச்சுக்கள் அடிபட்டு அந்த படமே கடைசியில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தலைவன் இருக்கின்றான் படத்திலும் விஜய்சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், விக்ரம் படத்தில் கூட விஜய்சேதுபதி கமலுடன் இணைந்து நடிக்கப் போவது இல்லையாம்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே