பத்திரிகையாளர்களின் செயல் என்னை செருப்பால் அடித்ததுபோல் உள்ளது: விஜய் சேதுபதி
Recommended Video

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களை புகழ்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பல விருதுகளை வாங்கியுள்ள இப்படத்தை பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய விஜய் சேதுபதி, மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை விருப்பமில்லாமல் தயாரித்ததாகவும், பத்திரிகையாளர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவது செருப்பால் அடித்தது போல் உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஏனோதானோ என்று தான் இந்தப்படத்தை எடுத்தேன். இப்படத்தினால் எனக்கு எந்த லாபமும் கிடையாது. என்னுடைய முந்தைய படங்களுக்கு பத்திரிகையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வரும்போது எனக்கு கோபம் வரும்.
ஆனால், இந்த படத்தை அவர்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களின் நிலைப்பாடு சரி என நிரூபித்துவிட்டனர். என்னுடைய கணக்கு பொய்யாகிவிட்டது எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











