விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. மே 15-ல் ஆரம்பம்!

By Vignesh Selvaraj

சென்னை : விஜய் சேதுபதி தற்போது '96'', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஜுங்கா' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, 'சைரா நரசிம்ம ரெட்டி', 'செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட சில படங்களில் வில்லன், முக்கிய கேரக்டர் என நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அடுத்து 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

Vijay sethupathi film shooting starts on may 15

அருண்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் வரும் மே 15 முதல் தொடங்கவிருக்கிறது. தென்காசியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து மலேசியாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்றபோதே, விஜய் சேதுபதி நடிக்க கோகுல் இயக்கிய 'ஜுங்கா' படத்தின் ஷூட்டிங் நடைபெற்று சர்ச்சை ஏற்பட்டது. விஜய் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதால் வேண்டுமென்றே ஷுட்டிங் நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X